விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அளி மலர்மேல் அயன் அரன் இந்திரனோடு*  ஏனை அமரர்கள்தம் குழுவும் அரம்பையரும் மற்றும்*
    தெளி மதி சேர் முனிவர்கள்தம் குழுவும் உந்தித்*  திசை திசையில் மலர் தூவிச் சென்று சேரும்*
    களி மலர் சேர் பொழில்-அரங்கத்து உரகம் ஏறிக்*  கண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்*
    ஒளி மதி சேர் திருமுகமும் கண்டுகொண்டு*  என் உள்ளம் மிக என்றுகொலோ உருகும் நாளே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அளி மலர்மேல் அயன் - (மதுபானத்துக்காக) வண்டுகள் படிந்திருக்கிற தாமரைப்பூவில் தோன்றிய பிரமனும் சிவனும்;
அரன் - சிவனும்;
இந்திரனோடு ஏனை அமரர்கள் தம் குழுவும் - இந்திரனோடுகூட மற்றைத்
தேவர்களின் திரளும்;
அரம்பையரும் - ரம்பை முதலிய தேவமாதரும்;
மற்றும் - மற்றுமுள்ள;

விளக்க உரை

உரை:1

தேவர்களும் தேவமாதர்களும் முனிவர்களும் ஆராதநோபகரணங்களைக் கோண்டுவந்து, திரள் மிகுதியாலே ஒருவரையொருவர் நெருக்கிதள்ளிப் புகும்படியான கோயிலிலே கண்வளர்ந்தருளாகின்ற பெரியபெருமாளையுடைய செந்தாமரைக் கண்ணையும் முகசந்த்ர மண்டலத்தையும் ஸேவிக்கப்பெற்று, ‘பாவியேனுக்கும் இப்பேறு வாய்த்த அதிசயம் என் கொல்! என்று நெஞ்சுருகும்படியான நாளும் வரப்போகிறதோ! என்கிறார்.

உரை:2

வண்டு மலரும் தாமரை மேல் உள்ள பிரமனும், சிவனும் இந்திரனும் தேவர்களும் அரம்பையர்களும், தெளிந்த ஞானமுடைய முனிவர்களும் நெருக்கிக் கொண்டு திசையெல்லாம் பூக்களைத் தூவி அரங்கனை வழிபட வருவர். தேன் மலர் சோலைகள் உள்ள ஸ்ரீரங்கத்தில் பாம்பின் மீது கண்வளரும் கடல் நிறப் பெருமானின் தாமரைக் கண்களையும் சந்திரன் போன்ற முகத்தையும் பார்த்து வணங்கி, என் மனம் உருகும் நாள் என்றோ ? என்று ஏங்குகிறார்.

English Translation

The Lord with a bright moon -like countenance reclines on a serpent in Arangam, surrounded by nectar-laden flower-groves. With Brahma seated on his bee-fresh blossom leading Siva, Indra and the host of gods, Rambha leading the celestial nymphs, and Narada the gathering of clear-headed Munis, they cramp the sanctum and strew flowers every way. O, when will I see his form and melt my heart out?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்