விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி*  இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த*
    துணையில்லாத் தொல் மறை நூல்-தோத்திரத்தால்*  தொல் மலர்க்கண் அயன் வணங்கி ஓவாது ஏத்த*
    மணி மாட மாளிகைகள் மல்கு செல்வ*  மதில்-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
    மணிவண்ணன் அம்மானைக் கண்டுகொண்டு*  என் மலர்ச் சென்னி என்றுகொலோ வணங்கும் நாளே 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இன்பம் - (வீணாகானத்தாலே) இன்பந்தருகின்ற;
தும்புரவம் - தும்புரு மஹரிஷியும்;
நாரதனும் - நாரத முனிவனும்;
இணைஇல்லா இன் இசை - ஒப்பற்றதும் போக்யமுமான இசையை;
யாழ் - வீணையிலே;

விளக்க உரை

தும்புரு நாரதர் முதலிய முனிவர்கள் பகவத்குணங்களை இனிய இசையுடன் வீணையிலேயிட்டுப் பாடிக்கொண்டும், நான்முகன் முகங்களாலும் நான்கு வேதங்களை ஓதிக்கொண்டும் வணங்கப் பள்ளிகொண்டருளாநின்ற பெரியபெருமாளை நான் ஸேவிக்கப் பெறுவதும், அரசாட்சிக்கு ஏற்பப் பூமுடி சூடிக்கிடக்கின்ற என்தலை அவனுடைய திருவடியை முடிசூடப் பெறுதலும் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார். இன் இசை யாழ் கெழுமி-இனிய இசையையுடைத்தான வீணையை அப்யஸித்து என்றுமாம்.

English Translation

The Lord of gem-hue reclines on a serpent in the citadel of Arangam, surrounded by tall jeweled mansions, amid wealth and prosperity. He is praised relentlessly by the eternal Brahma on his lotus-navel with the ancient chants of the Vedas. The adorable Rishis, Tumburu, and Narada, play their instruments of unsurpassable sweetness, sing his praise, and bow to him. O, when will I see him and lower my crowned head at his adorable feet?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்