விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாவினை வாய் பிளந்து உகந்த மாலை*  வேலை வண்ணனை என் கண்ணனை வன் குன்றம் ஏந்தி*
    ஆவினை அன்று உயக் கொண்ட ஆயர்-ஏற்றை*  அமரர்கள் தம் தலைவனை அந் தமிழின் இன்பப்
    பாவினை*  அவ் வடமொழியை பற்று-அற்றார்கள்*  பயில் அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
    கோவினை நா உற வழுத்தி என்தன் கைகள்*  கொய்ம்மலர் தூய் என்றுகொலோ கூப்பும் நாளே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வேலை வண்ணணை - கடல்போன்ற வடிவையுடையவனாய்;
ஏன் கண்ணணை - என்னுடையவன்’ என்று அபிமானிக்கக் கூடிய (ஸூலபனான) க்ருஷ்ணனாய்’;
அன்று - (இந்திரன் கல் மழை பெய்வித்த) அக்காலத்திலே;
வல் குன்றம் ஏந்தி - வலிய (கோவர்த்தன) மலையை (க்குடையாக)த் தூக்கி;
ஆவினை உய்யக் கொண்ட - பசுக்களைக் காப்பாற்றியருளின;

விளக்க உரை

குதிரை வடிவங்கொண்டு தன்னைக் கவளங்கொள்ளவந்த கேசியென்னு மசுரனைக் கொன்று தன்னை நித்யாநுபாவ்யனாக உபகரித்தருளினவனும், கடலைக் கண்டாற் போலே வடிவைக்கண்டபோதே தாபத்ரயமும் தீரும்படியிருப்பவனும், அரியன செய்து ஆச்ரிதரைக் காப்பாற்றினவனும் பரம யோக்யனுமான ஸ்ரீரங்கநாதனை நாத்தழும் பெழத் துதித்து நன்மலர்களைக் கொணர்ந்து ஸமர்ப்பித்து ‘அடியேனை ஆட்கொள்ள வேணும்’ என்கிற ப்ரார்த்தனை தோற்றக் கைகூப்பி நிற்கும்படியான பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ என்கிறார். எம்பெருமானுடைய ஒப்புயர்வற்ற போக்யதைக்கு அவனுடைய திவ்ய குணங்களை ப்ரதிபாதிக்கின்ற திருவாய்மொழி முதலிய திவ்ய ப்ரபந்தங்களும் ஸ்ரீராமாயணம் முதலிய இதிஹாஸ புராணங்களுந் தவிர வேறொன்றும் ஒப்புச்சொல்லத் தகாமையால் “அந்தமிழினின் பப்பாவினை அவ்வடமொழியை” என்றார். (பற்றற்றார்கள் பயிலரங்கம்) “சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர்,அற்ற பற்றர் சுற்றிவாழு மந்தணீரரங்கமே” என்றார் திருமழிசைப்பிரானும்.

English Translation

The adorable Lord, the ocean-hued-one, reclines on a serpent-bed in Arangam. In the yore, he ripped the horse Kesin’s jaws; he lifted a mountain and gave protection to cows against a hailstorm. Sweet as the Tamil songs sung by freed souls, and praised by Vedic seers, he is my Krishna, dear to me. O, when will I worship him with flowers plucked with my own hands, and praise him till my tongue swells?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்