விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எம் மாண்பின் அயன் நான்கு நாவினாலும் எடுத்து ஏத்தி*  ஈரிரண்டு முகமும் கொண்டு*
    எம்மாடும் எழிற்கண்கள் எட்டினோடும்* தொழுது ஏத்தி இனிது இறைஞ்ச நின்ற*  செம்பொன்-
    அம்மான்தன் மலர்க் கமலக் கொப்பூழ் தோன்ற* அணி-அரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
    அம்மான்தன் அடியிணைக் கீழ் அலர்கள் இட்டு அங்கு* அடியவரோடு என்றுகொலோ அணுகும் நாளே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எமாண்பின் அயன் - ஸர்வவிதத்தாலு முண்டான மாட்சிமையையுடைய நான்முகன்;
நான்கு நாவினாலும் (தனது) - நாலு நாக்கினாலும்;
எடுத்து - சொற்களை யெடுத்து;
ஏத்தி - துதித்து;
ஈர் இரண்டு முகமும் கொண்டு - நான்கு முகங்களாலும்;

விளக்க உரை

பிரமன் வாயாரவாழ்த்திக் கண்ணாரக்கண்டு களிக்கும்படியாவும், ஸகலலோகங்களினுடையவும் ஆவிர்ப்பாவத்துக்குக் காரணமாகிய திருநாபிக்கமலம் நன்கு விளங்கும்படியாகவும் திருவனந்தாழ்வான் மீது சாய்ந்தருளாநின்ற பெரியபெருமாளை ஆராதிக்கின்ற அடியார்களோடுகூட அடியேனும் ஆராதிக்கும்படி அந்த திவ்யஸந்நிதானத்திற்குப்போய்ச் சேரும் பாக்கியம் என்றைக்கு வாய்க்குமோ? என்கிறார். எம்மாண்பின்-துதிப்பதற்கு உறுப்பான வாக்தேவியை எப்போதும் தன்வசமாகக் கைக்கொண்டிருக்கும் அதிசயத்தையுடையவன் என்பது உட்கருத்து.

English Translation

In the Jewel-city of Arangam, the Lord reclines on a serpent bed, with the praiseworthy Brahma seated on a lotus emerging from a navel. The four-faced one with his eight bright eyes looks everywhere and bows in obeisance with folded hands, while his four tongues eternally chant the Lord’s everlasting praise. O, when will I strew flowers at the Lord’s feet and mingle with his devotees there?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்