விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அல்லல் விளைத்த பெருமானை*  ஆயர்பாடிக்கு அணி விளக்கை* 
  வில்லி புதுவைநகர் நம்பி*  விட்டுசித்தன் வியன் கோதை* 
  வில்லைத் தொலைத்த புருவத்தாள்*  வேட்கை உற்று மிக விரும்பும்* 
  சொல்லைத் துதிக்க வல்லார்கள்*  துன்பக் கடலுள் துவளாரே* (2)  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வில்லைதுலைத்த - வில்லைத் தோற்கடித்த
புருவத்தாள் - புருவங்களையுடையளாய்
வில்லி புதுவை நக் நம்பி விட்டு சித்தன் வியன் கோதை - ஸ்ரீவில்லி புத்தூர்க்குத் தலைவரான் பெரியாழ்வாருடைய மகளாய் ஆச்சர்ய குணசாலிநியான ஆண்டாள்,
அல்லல் விளைத்து பெருமானை - (திருவாய்ப் பாடி முழுதும்) தீங்குவிளைத்து அதனால் பெருமைபெற்றவனும்
வேட்டை உற்று - ஆசைப்பட்டு

விளக்க உரை

உரை:1

இத்திருவாய்மொழிகற்றார்க்குப் பலன் சொல்லி முடிக்கிறாள் இதில் * நிச்சலும் தீமைகள் செய்யும் பெருமானாகிய கண்ணபிரான் விஷயமாகப் பெரியாழ்வார் திருமகளார் அருளிச்செய்த இச்சொன்மாலைகளைப் புகழ்ந்து பாடவல்லவர்கள் ஸம்ஸாரமாகிற பெருங்கடலிலே விழுந்து நோவுபடமாட்டார்கள் என்கிறாள். “***“ (பஹவோ ந்ருப! கல்யாணகுணா புத்ரஸ்யஸந்திதே) என்னுபடியாக “குணசாலி“ என்று இராமபிரான் புகழ்பெற்றாற்போலக் கண்ணபிரான் “அல்லல் விளைத்த பெருமான்“ என்று புகழ்பெற்றிருப்பனாய்த்து. இவன்செய்யும் தீம்புகள் திருவாய்ப்பாடிக்கு விளக்கிடாற்போலிருக்கு மென்பது தோன்ற “அல்லல்விளைத்த பெருமானை ஆயர்பாடிக்கணி விளக்கை“ என்கிறாள். “இவன் தீம்புக்கு இலக்காகாதபோது ஊராக இருண்டு கிடக்குமாய்த்து“ என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்திகாண்க.

உரை:2

துன்பங்கள் எல்லாம் விளைத்த பெருமானை திருவாய்ப்பாடிக்கு அணிவிளக்கை, வில்லிபுத்தூர் நகரின் தலைவரான விஷ்ணுசித்தரின் திருமகளான கோதை - வில்லை பழிக்கும் புருவமுடையவள் - கண்ணன் மேல் மிகவும் வேட்கை உற்று மிக விரும்பிச் சொல்லும் இந்தச் சொற்களை துதிப்பவர்கள் துன்பக்கடலுள் விழ மாட்டார்கள்

English Translation

These words of love by Goda of bow-like eyebrows, the wonderful daughter of Villiputtur’s Lord Vishnuchitta, praise the tormenting Lord, beacon of the cowherd clan. Those who sing it with gusto will escape the ocean of misery.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்