- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
‘இப்படிப்பட்ட பதற்றம் உனக்கு ஆகாது, சிறிது அடக்கம்வேண்டும்‘ என்று சொன்ன தாய்மார்களைநோக்கிக் கூறுகின்றாள் -என் கொங்கைகள் படுகிறபாட்டைப் பாருங்கள், ‘கையுந்திருவாழியுமான அழகுபொலிந்து, நின்ற கண்ணபிரானுடைய முகத்தை நோக்குவோமேயன்றி மற்று எவரையும் நோக்கமாட்டோம்‘ என்று திண்ணிதாக ஸங்கல்பஞ செய்துகொண்டு சிவந்த கச்சினால் கண்ணை மறைத்துக்கொண்டு க்ஷுத்ர மநுஷ்யர்களைக் கண்டால் நாணிக்கிடக்கின்ற இம்முலைகளைக் கொண்டு நான் எங்ஙனே ஆற்றுவேன்? கோவிந்தனுடைய வீட்டுவாசலிலே புகுந்தாலன்றித் தரிக்கமுடியாது இவற்றுக்கு, “விழிக்குங் கண்ணிலேன் நிண்கண் மற்றல்லால் வேறொருவரோடு என்மனம் பற்றாது“ என்றும் “மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்“ என்றும் ஸங்கல்பித்துக்கொண்டிருக்கிற இவற்றுக்கு நான் என்ன ஸமாதாநம் கூறுவேன்? ஆகையாலே இங்கு நின்றும் என்னைக் கொண்டுபோய் யமுனைக்கரையிலே எறியுங்களென்கிறாள். * தூயபெருநீர்யமுனைத் துறைவனோடே ஜலக்ரீடைபண்ணி விளையாட மநோரத்திக்கிறாளாய்த்து. “கோவிந்தனுக்கல்லால் வாயில்போகா“ என்றவிடத்திற்கு வியாக்கியானம் - “பசுக்களின்பின்னே போய்த் தீம்பிலே கைவளரும் க்ருஷணனுக்கல்லது, வழியேபோய் வழிவந்து ஏகதாரவரதனாயிருக்ம் சக்ரவர்த்தி திருமகனுக்கு வழிபோகாது.“ என்று.
English Translation
Take a look at these breasts of mine; they are blindfolded by a red corset. Seeking the conch-wielding Lord alone, they shun the sight petty mortals. Since they will not enter another household, end this life of mine here, and take me to the banks of the Jamuna.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்