- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
எம்பெருமானுடைய விஸ்லேஷம் நெடுகிச்செல்லவே, அதனால் உடல் ஈர்க்குப்போல் கைவளைகளெல்லாம் கழன்றொழிந்தமையையும், இவ்வளவிலும் வந்து முகங்காட்டாத எம்பெருமானுடைய கொடுமையுங் கூறி வருந்துகின்றாள். எந்திழையீர்! என்று அருகே வந்துநிற்கும் பெண்களை விளிக்கிறபடி. “பெண்காள்! - தோழிகாள்!“ என்னாதே எந்திழையீர் என்றது - என்னைப்போலே வளையிழந்து வருந்தாதே, ப்ரளயத்துக்குத் தப்பிப் பிழைப்பாரைப்போலே நீங்கள் மாத்திரம் அவனுடைய விரஹத்துக்கு எப்படித் தப்பிப்பிழைத்தீர்கள்? என வியந்து கேட்கிறபடிபோலும். “ஏந்திழையீர்!, யாமுகக்கு மென்கையிற் சங்கமும் தாமுகக்கும் தம்கையிற் சங்கமே போலாவோ? என்று அப்பெருமாளைக் கேளுங்கள்“ என்று வாக்யசேஷம் பூரித்துக்கொள்ளவேணும். ‘நம் கையிலுள்ள சங்கு எப்போதும் நம்கையிலேயே இருக்கவேணும்‘ என்று அவர் ஆசைப்படுவதுபோல், நானும் ‘நம்கையிலுள சங்கு நம்கையிலேயே இருக்கவேணும்‘ என்று ஆசைப்பட ப்ராப்தி இல்லையா? அவருடைய ஆசைமாத்திரம் வழுவாமல் பலித்துவிடவேணும் என்னுடைய ஆசைமாத்திரம் பாழ்த்துப் போகவேணுமென்று இஃது என்ன விபரீதஸங்கல்பம்? என்று அவரையே போய்க் கேளுங்கள் என்கிறாள். இரண்டடியிலும் சங்கம் என்றது ஸப்தஸ்லேஷம். பாஞ்சஜந்யத்துக்கும் கைவளைக்கும் பெயர்.
English Translation
As the Sanku conch in his hands is dear to him, --O Jeweled Ladies! -- are not the Sanku bangles on my hands dear to me? The Arangar Lord reclining on a fierce serpent does not deign to see my face, O Mother, O Mother!
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்