விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொண்ட கோலக்*  குறள் உருவாய்ச் சென்று* 
    பண்டு மாவலிதன்*  பெரு வேள்வியில்* 
    அண்டமும் நிலனும்*  அடி ஒன்றினால்* 
    கொண்டவன் வரில்*  கூடிடு கூடலே!*             
     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பண்டு - முற்காலத்திலே
கோலம் கொண்ட குறள் உரு ஆய் - (முப்புரி நூலும் க்ருஷ்ணாஜிநமும் முஞ்ஜியும் பவித்ரமும் தண்டுமான) கோலம் பூண்ட வாமந ரூபியாய்
மாவலி தன் - பெருவேள்வியில் சென்று
அண்டமும் - மேலுலகங்களையும்
நிலனும் - கீழுலகங்களையும்

விளக்க உரை

உரை:1

வாமநாவதாரத்திலும் த்ரிவிக்ரமாவதாரத்திலும் ஈடுபட்டுப் பேசுகிறாள். இவ்வவதார சாரித்திரம் ப்ரஸித்தம். இயற்கையான அழகுக்குமேலே யஜ்ஞோபவீத’ க்ருஷ்ணாஜிந, பவித்ர, கண்ட, மௌஞ்ஜீ முதலியவற்றை யணிந்துகொண்டதனாலே யுண்டான செயற்கை யழகு வீறு பெற்றிருந்தமையினால் கொண்ட கோலம் எனப்பட்டது. (பெரு வேள்வியில்.) எம்பெருமானைக் காண்பதற்கு நான் இப்பாடுபடுகிறேன்’ பகவத்விபூதிதஸ்கரர்களில் தலைவனான மஹாபலி ஒரு ச்ரமமுமில்லாமல் அப்பெருமானை பஜ்ஞவாடத்திலே கையிலங்கு நெல்லிக்கனியாகக் காணப்பெற்றானே!, அவ்வேள்வியின் பெருமை என்னோ! என்று கொண்டாடுகின்றமை தோன்ற “வேள்வியில்” என்னாதே “பெரு வேள்வியில்” என்கிறாள். “அடி யொன்றினால்” என்றது “அடி ஒவ் வொன்றினால்” என்றபடி (கூ)

உரை:2

முன்னாளில் மாவலியின் பெரிய வேள்விக்கு அழகிய குறள் உருவுடன் சென்று நிலவுலகத்தையும் அண்டங்களையும் ஒவ்வொரு அடியால் அளந்து தன் உரிமையாய்க் கொண்டவன் வருவானெனில் நீ கூடிடு கூடலே.

English Translation

Talking the form of the beautiful bachelor boy, the Lord went to the fabulous Mabali’s sacrifice, and took the Earth and sky all in one stride. If he will come, then join, O Lord-of-the-circle.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்