விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாமிமார் மக்களே அல்லோம்*  மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்* 
  தூமலர்க் கண்கள் வளரத்*  தொல்லை இராத் துயில்வானே* 
  சேமமேல் அன்று இது சால*  சிக்கென நாம் இது சொன்னோம்* 
  கோமள ஆயர் கொழுந்தே!*  குருந்திடைக் கூறை பணியாய்*     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாமியார் மக்களே அல்லோம் - உனக்குத் தேவிமாராகும் முறையிலுள்ளார் மாத்திரமல்லோம்’
மற்றும் எல்லோரும் - மற்றுள்ள மாமிமார், அவர்கள் தாய்மார் முதலியவர்களும்
இங்கு - இவ்விடத்தில்
போந்தார் - வந்திருக்கின்றார்கள்’
இது - நீ செய்கிற இத்தீம்பானது

விளக்க உரை

கண்ணபிரான் க்ஷணந்தோறும் தீமைகளை மிகமிகச் செய்யப் புக்கவாறே, ‘இவன் ஊரில் இவ்வளவு செய்யாமல் இங்கே செய்வதனால் ‘தனியிடத்திலே செய்வதற்கு ஆராய்ச்சியில்லை’ என்று இவன் நினைத்திருக்கக்கூடுமெனக் கருதி, ‘பிரானே! தனியிடத்திலே இவை செய்கிறோமென்று நினையாதே கொள்’ இவை ஊரிலும் போய்ப்பரவிப் பெருத்த பழியாய் முடியும்’ என்று ஆய்ச்சிகள் சொல்ல, ‘ஊரிற் பழியாவதென்? ஊரிலிருந்து நீங்களன்றோ இங்கேற வந்தீர்கள், நான் பெரிய தீம்பனென்பது உங்கட்குத் தெரியுமிறே’ என்று கண்ணபிரான் கூற, ‘நீ இவ்வாறு தீம்புசெய்வதற்குக் காரணமென்?’ என்று ஆய்ச்சிகள் கேட்க’ ‘இங்குள்ளாரனைவரும் எனக்கு மைத்துனமை முறை யுடையார்களானது பற்றிச் செய்கிறேன், என்ன’ அது கேட்ட ஆய்ச்சிகள், ‘அப்படியா? இங்குள்ளாலெல்லாரும் உன்னோடு மைத்துனமை முறையுடையாரல்லர்’ மாமிமார்மக்கள் சிலர், மாமிமார் சிலர், மாமிமார்களின் தாய்மார் சிலர்என்றிப்படி பலவகைப்பட்ட உறவு முறையார் இங்குண்டு காண்’ ஆகையாலே இத்தீமைகளைத் தவிராய்;’ என்கிறார்கள். மாமிமார் மக்கள் - பத்நிகள் என்றபடி’ வடமொழியில், நாயகனை ‘ஆர்யபுத்ரர்’ என வழங்குவதோடு ஒக்கும் இவ்வழக்கு. கீழ் “மாமிதன் மகனாகப் பெற்றால்” என்றதுங் காண்க. .

English Translation

We are not your mother’s daughters-in-law. Besides, there are others watching. What you do is just not right, this is our consider opinion. O Lord with flower fresh eyes, who sleeps without a care in the ocean, O Soft cowherd-child, pray hand us our clothes from the Kurundu tree.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்