விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நீரிலே நின்று அயர்க்கின்றோம்*  நீதி-அல்லாதன செய்தாய்* 
  ஊரகம் சாலவும் சேய்த்தால்*  ஊழி எல்லாம் உணர்வானே!* 
  ஆர்வம் உனக்கே உடையோம்*  அம்மனைமார் காணில் ஒட்டார்* 
  போர விடாய் எங்கள் பட்டைப்*  பூங்குருந்து ஏறியிராதே. *    

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உனக்கே - உன்விஷயத்திலேயே
ஆர்வம் உடையோம் - நாங்கள் அன்புள்ளவர்களாயிரா நின்றோம்’
அம்மனைமார் - எங்கள் தாய்மார்
காணில் - நீ பண்ணும் லீலைகளுக்கு நாங்கள் இணங்கி நிற்பதைக் கண்டால்
செய்தாய் - செய்யாநின்றாய்’

விளக்க உரை

பிரானே! கோழி கூவுதற்கு முன்னே, நீ உணர்ந்து வருவதற்கு முன்னே பிடித்து வந்து நாங்கள் நீரிலே தோய்ந்து அத்தாலே அறிவுகலங்கிப் படுகிற க்லேசங்களைப் பாராய் என்று ஆய்ச்சிகள் கூறியதைக் கேட்ட கண்ணபிரான் ‘நீங்கள் நீரிலே நின்று வருந்துவதற்கு மேலாக நான் நெடும் போதாக மரத்திலே நின்று பூச்சிகளுக்கும் புழுக்களுக்கும் இரையாகிப் படுகிற க்லேசத்தைக் கண்டீர்களில்லையோ? உங்களாலேயன்றோ எனக்கு இக்கஷ்டம் நேர்ந்தது’ என்று சேலைகளையுங் கொடாதே சில விலாஸ சேஷ்டிதங்களைப் பண்ண, ‘அப்பா! இப்படியும் எம்மை நீ அநியாயஞ் செய்வாயோ?’ என்று ஆய்ச்சியர் முறையிட, ‘நான் செய்வது அநியாயமாகில் நீங்கள் ஊரிலேபோய் முறையிட்டுக் கொள்ளுங்கள்’ என்று கண்ணன் கூற, நாயனே! ஊரும் மாளிகைகளும் கிட்டவிருந்தனவாகில் அது செய்யலாமாயிருந்தது, நாங்கள் உன்னால் கண்டுபிடிக்க வொண்ணாதபடி வரவேணுமென்று, நெடுந்தூரம் வந்தோமே ‘என்செய்வோம்’ என்று ஆய்ச்சிகள் அலமர’ அதுகண்ட கண்ணன் ‘பெண்காள்! நானோ மிறுக்குப் பண்ணாநின்றேன், ஊரோ தூரமாயிராநின்றது’ இனி நீங்கள் போக்கடியாக நினைத்திருப்பதென்?’ என்று வினவ, “ஊழியெல்லா முணர்வானே!” என்கிறார்கள். ஜகத்துக்களை யடங்க ப்ரளயம் வந்து விழுங்கியவன்று எல்லாப் பொருள்கட்கும் போக்கடியைச் சிந்தித்து ஜாகரூகனா யிருந்த நின்னையன்றி வேறுயாரைப் போக்கடியாக நினைக்கவல்லோ மென்கை. என்னும்படியான வன்று என்று போக்கடி பார்க்கவல்ல நீ பார்க்குமித்தனையன்றோ” என்ற வியாக்கியாநஸூக்தி அறிக.

English Translation

We stand in the water and suffer. What you do is not fair, alas! O lord who knows the universe, our homes are far away. We are fond of you alone. Our mothers will not permit this. Do not remain sitting on the blossoming Kurundu. Hand us our clothes.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்