விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தடத்து அவிழ் தாமரைப் பொய்கைத்*  தாள்கள் எம் காலைக் கதுவ* 
  விடத் தேள் எறிந்தாலே போல*  வேதனை ஆற்றவும் பட்டோம்* 
  குடத்தை எடுத்து ஏறவிட்டுக்*  கூத்தாட வல்ல எம் கோவே* 
  படிற்றை எல்லாம் தவிர்ந்து*  எங்கள் பட்டைப் பணித்தருளாயே*         

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தடம் - விசாலமாயும்
அவிழ் தாமரை - மலர்ந்த தாமரைகளை யுடையவுமான
பொய்கை  - தடாகத்திலே
தாள்கள் - தாமரைத் தண்டுகளானவை
எம்காலை - எங்கள் கால்களை

விளக்க உரை

கீழ்ப்பாட்டில், கயல்களுக்கும் வாளைகளுக்கும் வருந்தி முறையிட்ட ஆய்ச்சிகளை நோக்கிக் கண்ணபிரான், ‘பெண்காள்! கயலும் வாளையும் உங்களை வருத்தா நின்றனவாகில் அவற்றை ஒட்டுதற்கு ஒருபாயஞ் சொல்லுகிறேன் கேண்மின்’ “பெடையோடன்னம் பெய்வளையார்தம் பின்சென்று, நடையோடியிலி நாணி ஒளிக்கும் நறையூரே” (திருமொழி, சு-ரு-ரு.) என்று திருநறையூரில் வாழும் மாதர்களின் நடையழகைக் கண்ட அன்னங்கள் வெள்கி ஒளித்துக் கொள்ள நின்றன வென்று ப்ரஹித்தமாயிருக்கிறதிறே’ அப்படியே இக்கயல் வாளைகளும் உங்கள் கண்ணழகைக் கண்டால் நாணியொளிக்கத் தட்டில்லையே’ ஆகையாலே அவை மறைந்தோடும்படி உங்கள் கண்ணழகை அவற்றுக்குக் காட்டுங்கள், என்றாற்போலே சில நார்மோக்திகளைச் சொல்ல, அவற்றைக் கேட்க லுற்ற ஆய்ச்சிகள், ‘பிரானே! மீன்களுக்கு மாத்திரமேயோ நாங்கள் வருந்துவது’ இத்தடாகத்திலுள்ள தாமரைத் தாள்களுமன்றோ எமது காலைக் கதுவி வேதனைப் படுத்தா நின்றன’ இவற்றுக்குத் தப்பிப் பிழைக்கும் வழிசொல்லாய்’ என்ன’ அதுகேட்ட கண்ணபிரான், ‘இப்பெண்கள் மீன்களுக்கும் தாமரைத் தாள்களுக்கும் வருந்தாநின்றார்களே யன்றி நம்முடைய தீம்புகளைச் செய்வோம்’ என்றெண்ணி, இன்னது செய்தானென்று பிறர்க்குப் பாசுரமிட்டுச் சொல்ல வொண்ணாதபடி சிலவற்றைச் செய்யத் தொடங்கினான்’ ‘பிரானே! இந்த விஷமங்களைத் தவிர்ந்து பட்டைப் பணித்தருளாய்” என்கிறார்கள். (குடத்தையடுத்து இத்யாதி.) குடக்கூத்தென்பது - பிராமணர்க்குச் செல்வம் விஞ்சினால் யாகஞ் செய்வதுபோல, இடையர்க்குச் செல்வம் விஞ்சினால் அதனாலுண்டாகும் செருக்குக்குப் போக்கு வீடாக அவர் ஆடுவதொரு கூத்து’ இதனை ‘தலையிலே அடுக்குக் குடமிருக்க, இரு தோள்களிலும் இரு குடங்களிலிருக்க, இருக்கையிலும் குடங்களை யேந்தி ஆகாசத்திலே யெறிந்து ஆடுவதொரு கூத்து’ என்பர்’ இதனைப் பதினோராடலி லொன்று என்றும், அறுவகைக் கூத்தில் ஒன்று என்றுங்கூறி, “குடத்தாடல் குன்றெடுத்தோனாடல் அதனுக், கடைக்குபவைந்துறுப்பாய்ந்து” என்று மேற்கோளுங் காட்டினர்; சிலப்பதிகார வுரையில் அடியார்க்கு நல்லார்.

English Translation

In this large lake our legs are braced by the long stems of Lotus, making us suffer misery like when stung by a venomous scorpion. O Lord, Our King, adept in dancing with pots flung up high, pray give up your mischief and hand us our clothes.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்