விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காலைக் கதுவிடுகின்ற*  கயலொடு வாளை விரவி* 
  வேலைப் பிடித்து என்னைமார்கள் ஓட்டில்*   என்ன விளையாட்டோ?* 
  கோலச் சிற்றாடை பலவும் கொண்டு*  நீ ஏறியிராதே* 
  கோலம் கரிய பிரானே!*  குருந்திடைக் கூறை பணியாய்*            

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கரிய - கறுத்த
கோலம் - திருமேனியையுடைய
பிரானே - கண்ணபிரானே!
கயலொடு - கயல்மீன்களும்
வாளை- வாளை மீன்களும்

விளக்க உரை

- கண்ணபிரானே! நீ செய்யும் தீம்புகளால் நாங்கள் படும் வருத்தம் எவ்வளவாயிருந்தது பாராய்’ நீயோ எங்களை நீர் நிலையை விட்டு வெளிவர வொட்டாமல் சேலைகளைப் பறித்துக் கூத்தாட்டங் காணாநின்றாய்’ அல்குல் மறையுமாறு நீரினுள்ளே நிற்கின்ற எங்களுடைய காலைக் கயல்மீன்களும் வாளை மீன்களும் கவ்விக் கடித்துத் துடிக்கச் செய்யாநின்றன. இவ்வாறு நீ எங்கள் திறத்தில் செய்யுந் தீமைகளை எமது தமையன்மார்கள் கேள்விப்படுவரேல் சீறிச்சடக்கென ஓடிவந்து உன்னை வேலால் உதைத்துத் துரத்துவார்கள்’ ஆனபின்பு விபரிதமாகத் தலைக்கட்டவல்ல விளையாட்டு உனக்கு என்? என்று ஆய்ச்சிகள் அச்சமுறுத்த, அதுகேட்ட கண்ணபிரான், ‘பெண்காள்! பிறகு வருவது வருக’ அதைப்பற்றி நான் இப்போது சிந்திப்பேனல்லேன்’ இப்போது என் கையில் அகப்பட்டுக்கொண்ட இச்சேலைகளை உங்களுக்குக் கொடுப்பதென்கிற சங்கதி இல்லை’ என்று - அரையிலே ஒன்றைச் சாத்துவது, தலையிலே ஒன்றைக் கட்டுவது, உத்தரியமாக ஒன்றை அணிவதாக, இப்படித் தன் திருமேனிக்குப் பரபாகமாம்படி நாநாவர்ணமான சேலைகளாலே அலங்கரித்து மிகுந்தவற்றைக் குருந்தமரத்தின் மேலேயிட்டு வைத்து, ‘பெண்காள்! அணிந்த இவை நமக்குத் தகுதியாயிருந்தபடி கண்டீர்களா? என் அலங்காரத்தை அழித்தோ நீங்கள் இவற்றை வேண்டுவது?’ என்றான்’ ‘பிரானே! உன் திருமேனியை அழகு பெறுத்துஞ் சேலைகளை நாங்கள் வேண்டுகின்றிலோம்’ குருந்தில் கிடக்கிறவற்றைத் தாராய்’ என்கிறார்கள்.

English Translation

The catfish and the Kayal fish are nibbling at our feet. What is the fun if my brothers take a staff and drive you away? Do not remain sitting on the tree with our beautiful clothes. O dark, lovely Lord, hand them down from the Kurundu tree.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்