விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  எல்லே ஈது என்ன இளமை*  எம் அனைமார் காணில் ஒட்டார்* 
  பொல்லாங்கு ஈது என்று கருதாய்*  பூங்குருந்து ஏறி இருத்தி* 
  வில்லால் இலங்கை அழித்தாய்!*  வேண்டியது எல்லாம் தருவோம்* 
  பல்லாரும் காணாமே போவோம்*  பட்டைப் பணித்தருளாயே*

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வில்லால் - வில்லாலே
இலங்கை - லங்கையை
அழித்தாய் - நாசஞ் செய்தருளினவனே!
எல்லே - என்னே!
ஈது என்ன இளமை - இது என்ன பிள்ளைத்தனம்!

விளக்க உரை

ஆய்ச்சிகள் நெடுங்காலம் நீரிலே நின்று வருந்தச் செய்தேயும் கண்ணபிரான் அவர்கள் சேலைகளைக் குருத்த மரக்கிளையிலேயே இட்டுவைக்க, ‘கரங்கள் நீரிலே கெடும்போதாக நின்று வருந்த, நீ பேசாதிருக்கிறதென்’ சேலைகளைத் தா’ என்று இவர்கள் கேட்க’ ‘நீரை விட்டுக் கரைமேல் ஏறுங்கள், சேலைகளைத் தருகிறேன்’ என்றான்’ அதுவும் மெய்தானென்று சிலர்நம்பிக் கரைமீது ஏறினார். ஏறினவர்களுடைய அங்கப்ரத்யங்களை உற்றுநோக்கிப் புன்முறுவல் செய்து சில விலாஸ சேஷ்டைகளைப் பண்ணினான்’ எல்லே! ஈதென்ன இளமை” என்றார்கள். ‘நான் இளைஞனும்படி நீங்கள் தாம் முலைபெருத்த முதுமையரோ? வயஸ்ஸில் பார்த்தால் என்னோடு உங்களோடு ஒரு வாசி இல்லை’ இரண்டு திறத்தாரும் ஒத்த பருவமானபின்பு பருவத்துக் கீடாகப் பாரிமாற நீங்கள் உடன்பட வேண்டாவோ?’ என்றான்’ “எம்மனைமார் காணில் ஒட்டார்” என்கிறார்கள். நாங்கள் உடன்படாமையில்லை, எங்கள் சுற்றத்தார் கண்டால் சீறுவார் என்ற அச்சத்தினால் மறுக்காநின்றோ மென்கை. அது கேட்ட கண்ணபிரான், ‘பெண்காள்! அழகாகச் சொன்னீர்கள்’ உங்களுக்கு மாத்திரந்தானோ சுற்றத்தாருள்ளது? எனக்கும் ஒரு தாயும் தகப்பனம் உறவு முறையாருமில்லையா! நான் ஏதேனும் காம்பற்று வானத்தினின்றும் விண்டு விழுந்தேனோ? சுற்றத்தார் பலரும் இருக்கவன்றோ நானும் இங்ஙனே பேசுகிறது’ உங்களுக்கு மாத்திரம் வந்த அச்சமென்?’ என்ன’ அது கேட்ட ஆய்ச்சிகள், ‘உன்னைப் போலேயோ நாங்கள், எங்களைப் போலேயோ நீ? நாங்கள் பழிக்கு அஞ்சுவோம், நீ பழியென்றால் உடம்பு பெருக்கிறாயன்றோ’ என்கிறார்கள்-“பொல்லாங் கீதென்று கருதாய்.”

English Translation

Come now, what childishness is this, sitting on the Kurundu tree? Our mothers will not approve of it; do you not consider it bad? O Sire who destroyed Lanka with a bow, we will give you all you ask for and go home unseen. Pray hand us our clothes.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்