விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இது என் புகுந்தது இங்கு அந்தோ!*  இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்* 
  மதுவின் துழாய் முடிமாலே!*  மாயனே! எங்கள் அமுதே* 
  விதி இன்மையால் அது மாட்டோம்*  வித்தகப் பிள்ளாய்! விரையேல்* 
  குதிகொண்டு அரவில் நடித்தாய்!*  குருந்திடைக் கூறை பணியாய்*       

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இங்கு - இங்கே
புகுந்து இது என் - (நீ) வந்து சேர்ந்தவிதற்குக் காரணமென்ன?
இ பொய்கைக்கு - இக்குளத்திற்கு
எவ்வாறு வந்தாய் - எவ்வழியாலே வந்தாய்?
மதுஇன் துழாய் முடிமாலே - தேன்மாறாத இனிய திருத்துழாய் மாலை சூடிய திருவபிஷேகத்தையுடைய பெரியோனே!

விளக்க உரை

“இவர்கள் தங்களுடைய காரியத்தைப் பார்த்துக் கொண்டுபோக நினைக்கின்றனரேயன்றி, நம் அபிமதந் தலைக்கட்ட நினைக்கிறிலர்; இதற்கு என் செய்வது!” என்று சிந்தித்துக் கண்ணபிரான் சடக்கெனக் குருந்த மரத்தில் நின்றுமிழிந்து கீடே மிகுந்திருந்த ஒன்றிரண்டு பாரியட்டங்களையும் வாரிக்கொண்டு சுழல்காற்றுப்போலே எங்கும் வியாபாரித்து, ‘இன்னதுசெய்தான்’ என்று இவர்கள் அறுதியிடவொண்ணாதபடி, சேலைகளைப்போலே இவர்களது நெஞ்சையுங் கவர்ந்துகொண்டுபோய்க் குருந்தின் மேலேறி மறைவிருந்தான் ’ இவர்கள் கரையேறி ஒன்றுங்காணாமையாலே திடுக்கிட்டு, “இது என் புகுந்தது?” என்கிறார்கள், மின்னலின்றியே இடிவிழுந்து நிற்க கண்டோமென்கை. இப்பொய்கைக்கு ஸ்ரீ வழக்கமாக நீயும் நாமும் ஜலக்ரிடை பண்ணும் பொய்கையன்றே இது’ இதறிந்து நீ வந்தபடி என்? என்கிறார்கள். ‘நான் எப்படிவந்தாலென்ன? வந்தாயிற்று, இனி நீங்களும் நானும் ஸத்தை பெறும்படி அநுபவிக்குமத்தனையன்றோ’ என்றான் கண்ணன்’ அதுகேட்ட ஆய்ச்சிகள், ‘நீ ஆசைப்படுவது அழகியதே’ ஆகிலும் எங்களுடைய தெளர்ப்பாக்கியத்தினால் நாங்கள் அதற்கு இசைந்து வரமாட்டுகிறிலோம், என்கிறார்கள், அது என்பதற்கு ஸம்ச்லேஷம் அர்த்தமானபடி என்னென்னில்’ கண்ணபிரான் தன்னுடைய ஸம்ச்லேஷ விருப்பத்தை ஸூசனையாகக் காட்டினனாதலால், அதனை உணர்ந்த இவர்கள் அது என்று ஸம்ச்லேஷத்தைச் சுட்டுகிறார்கள் என்க. நெஞ்சறி சுட்டு. இப்படி இவர்கள் சொல்லச் செய்தேயும் அவன் தன் ஆற்றாமையாலே பதறி மேல்விழப் புக்கான்’ ‘பிரானே! உன் ஸாமர்த்தியம் நாம் அறிவோம்’ அவசரப்படாதே கடக்கநில்’ என்கிறார்கள். (விதியின்மையால்) விதி - பாக்யம். வடசொல், “***“ என்பது நிகண்டு. “குதிகொண்டு“ என்றவிடத்து, குதி என்பது - முதனிலைத் தொழிற்பெயர்.

English Translation

What made you come here? Alas how did you find this lake? O sweet Lord, our ambrosial delight of nectared Tulasi crown! We shall have none of that for impropriety. Clever lad, do not hasten. We know you jumped and danced on the serpent, now hand us our clothes.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்