விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சூழல் பலபல வல்லான்*  தொல்லை அம் காலத்து உலகைக்* 
  கேழல் ஒன்று ஆகி இடந்த*  கேசவன் என்னுடை அம்மான்,*
  வேழ மருப்பை ஒசித்தான்*  விண்ணவர்க்கு எண்ணல் அரியான்* 
  ஆழ நெடுங் கடல் சேர்ந்தான்*  அவன் என் அருகவிலானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பலபல சூழல் வல்லான் - மிகப்பல அவதாரங்கள் செய்ய வல்லவனும்
தொல்லையம் காலத்து - முன்பொரு காலத்திலே
கேசவன் - கேசவனென்னும் திருநாமமுடையவனும்
வேழம் - (குவலாயபீட மென்னும்) யானையினுடைய
கேசவன் - கேசவனென்னும் திருநாமமுடையவனும்

விளக்க உரை

பற்பல அவதாரங்களை எடுக்க வல்லவன் அழகியதான பண்டைக்காலத்தில் ஒப்பற்ற வராகமாகி இவ்வுலகைக் கோட்டாலே குத்தி மேலே கொண்டு வந்த கேசவன், என்னுடைய தலைவன், குவலயாபீடம் என்னும் யானையினது கொம்பை முரித்தவன், தேவர்கட்கு நினைக்கவும் அரியவன், ஆழமான நீண்ட கடலில் யோக நித்திரை செய்கின்றவன் ஆன அவ்விறைவன் என் அருகில் இருக்கின்றவன் ஆனான்.

English Translation

My Lord kesava is the Lord of many wonders, He killed the rutted elephant; he came as a boar and lifted the Earth, he reclines in the deep ocean mystifying celestials. He is near me now.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்