விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இவையும் அவையும் உவையும்*  இவரும் அவரும் உவரும்,* 
  எவையும் எவரும் தன்னுளே*  ஆகியும் ஆக்கியும் காக்கும்,*
  அவையுள் தனிமுதல் எம்மான்*  கண்ண பிரான் என் அமுதம்,* 
  சுவையன் திருவின் மணாளன்*  என்னுடைச் சூழல் உளானே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

இவையும் - ஸமீபத்திலுள்ள பொருள்களும்
இவையும் - நடுத்தரமாகவுள்ள பொருள்களும்
இவரும் - ஸமீபத்திலுள்ள சேதநர்களும்
அவரும் - தூரத்திலுள்ள சேதநர்களும்
உவரும் - நடுத்தரமாகவுள்ள சேதநர்களும்

விளக்க உரை

அண்மையிலுள்ளவையும் சேய்மையிலுள்ளவையும் நடுவிடத்துள்ளவையுமான அஃறிணைப்பொருள்கள் அனைத்தையும், அண்மையிலுள்ளவர்களும் சேய்மையிலுள்ளவர்களும் நடுவிடத்துள்ளவர்களுமான உயர்திணைப்பொருள்கள் அனைத்தையும், ‘தான்’ என்ற சொல்லுக்குள்ளே அடங்கி இருக்கும்படி அழித்தும், பின்னர் அவற்றை உண்டாக்கியும், உண்டாக்கிய பொருள்களைக் காத்தும், அவ்வவ்வுயிர்களுக்குள் உயிராய்த் தங்கியும் இருக்கின்ற ஒப்பற்ற காரணன், என் தலைவன், கண்ணனாய் அவதரித்தவன், எனக்கு அமிர்தம் போன்றவன், இன்பமயமானவன், திருமகள் கேள்வன் ஆன இறைவன் என் எல்லையில் இருக்கின்றவனானான்.

English Translation

The Lord is first-cause of all things and beings everywhere, he contains all in himself, then makes them again and protects them, My Lord, my ambrosia, the taste of sweetness, is the spouse of Lakshmi, He has entered my Vicinity.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்