விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்,*
  சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர்நடுவுள்,*
  மன்னிய நாகத்தணை மேல் ஓர் மாமலைபோல்,*
  மின்னும்மணி மகர குண்டலங்கள் வில்வீச,*
  துன்னிய தாரகையின் பேரொளிசேர் ஆகாசம்,*
  என்னும் விதானத்தின் கீழால்,* (2)  -இருசுடரை-

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மன்னிய - வாழ்ந்திடுக (மங்களாஸாசநம்)
தான் - எம்பெருமான்றான்
பல்பொறி சேர் ஆயிரம் வாய் வாள் அரவின் - பல புள்ளிகளையும் ஆயிரம் வாய்களையும் ஒளியையுமுடையனான திருவனந்தாழ்வானுடைய
சென்னி மணி குடுமி - படங்களில் விளங்குகின்ற மாணிக்கங்களின் நுனிகளில் நின்றும் பரவுகின்ற
தெய்வம் சுடர் நடுவுள் மன்னி - திவ்யமான தேஜஸ் ஸமூ ஹத்தினிடையே பொருந்தி

விளக்க உரை

பிரபந்தாரம்பத்தில் மன்னிய என்றவிது – மங்களாசாஸநமாய்த் தனியே நிற்பதொரு வியங்கோள் வினைமுற்று, வாழிய என்னுமாபோலே மன்னிய – வாழ்கவென்றபடி நாடுவாழ்க, எம்பெருமான் வாழ்க இத்திருமல் வாழ்க. வடநூலார் ஸ்ரீரஸ்து என்னும் ஸ்வஸ்தி என்னும் முகப்பில் எழுதுவதொக்கும் இது. ‘காமபுருஷார்த்தத்தையே நான் முக்கியமாகக் கைப்பற்றினேன்‘ என்று சொல்ல விரும்பிய ஆழ்வார், அதற்கு உறுப்பாகப் ‘புருஷார்த்தங்கள் நான்கு‘ என்றும், ‘அப்புருஷார்த்தங்களை வெளியிட்டது வேதம்‘ என்றும், ‘அந்தவேதம் நான்முகனால் வெளியிடப்பட்டது‘ என்றும், ‘அந்த நான்முகன் எம்பெருமானது உந்திக் கமலத்தில் தோன்றினவன்‘ என்றும், ‘அக்கமலம் எம்பெருமான் ஜகத்ரக்ஷணார்த்தமாக உறங்குவான்போல் யோகு செய்தருளினகாலத்து மலர்ந்தது‘ என்றும் அருளிச்செய்யவேண்டி அந்த யோக நித்ராத்தமான சயனத்தின் வைபவத்தை வருணிக்கிறார் – பல்பொறிசேர் என்று தொடங்கிதான் கிடந்து என்னுமளவால்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்