- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காரார் மணிநிறக் கண்ணனூர் விண்ணகரம்*
சீரார் கணபுரம் சேறை திருவழுந்தூர்*
காரார் குடந்தை கடிகை கடல்மல்லை*
ஏரார் பொழில் சூழ் இடவெந்தை நீர்மலை*
சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்*
காணொளி
பதவுரை
செம் கண் கொடியானை - சிவந்தகண்களை யுடையனாய்க் கொண்டு எனக்கு எட்டர் தேயிருப்பவனாய்
தேன் துழாய் தாரானை - தேனொழுகுகின்ற திருத்துழாய் மாலையை யுடையனாய்
தாமரைபோல் கண்ணானை அவனை - தாமரைபோன்ற திருக்கண்களையுடையனான அப்பெருமானை குறித்து
எண் அஞசீர் பேர் ஆயிரம் பிதற்றி - எண்ணமுடியாத (கொடிய) குணங்களுக்கு வாசகமான நூதந) ஸஹஸ்ர நாமங்களைப் பிதற்றிக்கொண்டு
விளக்க உரை
பெருமாள் திருக்கோவில்கள் இருக்கும் திருத்தலங்களைப் பட்டியல் இடும் போது திருமாலிருஞ்சோலை, திருமோகூர் என்று மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் இரு தலங்களைச் சொல்லிவிட்டு உடனே பத்ரிகாச்ரமம் என்ற வதரியையும் வடமதுரையையும் கூறுகிறார். திருமங்கையாழ்வார் சோழநாட்டவர். அதனால் அவருக்கு தென்னக மதுரை தென்மதுரையாகத் தான் இருந்திருக்க வேண்டும்; அது மட்டும் இல்லாமல் மதுரையின் வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலையைத் தனியாகச் சொல்லிவிட்டார். அதனால் வடமதுரை என்று சொன்னது உண்மையிலேயே வடநாட்டில் இருக்கும் மதுரையைத் தான் என்று கொள்வதில் தடையில்லை.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்