விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆரானும் கற்பிப்பார் நாயகரே? நான்அவனைக்
  காரார் திருமேனி காணும் அளவும்போய் 
  சீரார் திருவேங்கடமே திருக்கோவ 
  லூரே*(2)--மதிள்கச்சி ஊரகமே பேரகமே
  பேரா மருதுஇறுத்தான் வௌ¢ளறையே வெஃகாவே 
  பேர்ஆலி தண்கால் நறையூர் திருப்புலியூர் 
  ஆராமம் சூழ்ந்த அரங்கம்*--கணமங்கை  (2)

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஊர் ஆய எல்லாம் ஒழியாமே - திவ்ய தேசங்களா யுள்ளவற்றில் ஓரிடமும் தப்பாமல் (எங்கும் புகுந்து)
ஓர் ஆனை கொம்பு ஒசிந்து ஓர் ஆனை கோள் விடுத்த சீரானை - குவலயாபீடமென்ற ஒரு யானையின் கொம்பை முறித்தும் மற்றொரு யானையின் இடரைப் போக்கியும் சீர்மை பெற்றவனாய்
செம் கண் கொடியானை - சிவந்தகண்களை யுடையனாய்க் கொண்டு எனக்கு எட்டர் தேயிருப்பவனாய்

 

விளக்க உரை

பந்தடிக்கத் தொடங்கிக் குடக்கூத்திலேயகப்பட்டு மெலிந்த நான், என்னை இப்பாடு படுத்தினவனுடைய காரார்ந்த திருமேனியைக்கண்டு களிக்கப் பெறுமளவும் அவன் குணங்கள் கொண்டாடி யிருக்கும் தேசமெங்கும் நுழைந்து, விரஹம் தின்ற என்வடிவைக் காட்டி அவன் குணங்களை யழித்து வழியில்லா வழியினாலாயினும் அவனைப் பெறக்கடவேனென்று தன் துணிவை வெளியிடுகிறாள். கச்சியூரகம் – காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீ உலகளந்த பெருமாள் ஸ்ந்நிதி, பேரகம் – அப்பக்குடத்தான் ஸந்நிதி. பேரா மறுதிறுத்தான் – ‘பேரா‘ என்பதை மருதுக்கு விசேஷணமாக யோஜிப்பது, பேராத (அஸுராவேதத்தாலே) ஸ்திரமாக நின்ற யமளார்ஜுநங்களை என்றபடி. அன்றியே, பேரா என்பதை செய்யாவென்னும் வாய்பாட்டிறந்தகால் வினையெச்சமாகக் கொண்டு (பேர்ந்து என்றபடியாய்) தளர் நடையிட்டுக் கொண்டு சென்று மருதுகளை முறித்தானென்றுமாம். எண்ணருஞ்சீர்ப் பேராயிரமும் பிதற்றி என்றவிடத்துப் பெரிய வாச்சான்பிள்ளையின் ஸ்ரீஸூக்தி காண்மின் – “குணகதநம் பண்ணுகைக்கு ஒரு ஸ்ரீ ஸஹஸ்ர நாம்முண்டிறே, அப்படி குணஹாநிக்கும் ஒரு ஸஹரநாமம் பண்ணுகிறேன்“

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்