- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்

பாசுரம்
காரார் திருமேனி கண்டதுவே காரணமா*
பேராபிதற்றா திரிதருவன்*--பின்னையும்
காணொளி
பதவுரை
நான் - நானோவென்றால்
அவனை கார் ஆர் திருமேனி காண்டதுவே காரணம் ஆ - அவனது கரிய திருமேனியை ஸேவித்தது முதலாக
பேரா பிதற்றாதரிதருவன் - உருமாறி வாய் வெருவிக் கொண்டு திரியாநின்றேன்,
பின்னையும் - அதற்குமேல்,
தண் வாடை - குளிர்ந்த காற்றானது
இ உடலை ஈரா புகுதலும் - (எனது) இவ்வுடம்பைப் பிளந்துகொண்டு உள்ளேபுகுந்து
விளக்க உரை
எனது தாய் மாத்திரம் கவலையற்றுக் கையொழிந்தாளே யொழிய, நான் கவலை தீரப்பெற்றிலேன், என் துக்கம் தொலையப் பெற்றிலேன் என்கிறாள் பரகால நாயகி. ஸகல தாபங்களையும் தணிக்குமதான அவனுடைய திவ்ய திருமேனியை அன்றொருநாள் நான் காணப்பெற்றது முதலாக, நிலைகுலைந்து வாய் வந்தபடி கண்டவா பிதற்றிக்கொண்டு திரிபவளாயினேன். கள் குடித்த குரங்குக்குத் தேள்கடியும் நேர்ந்தாற்போலே குளிர்ந்த வாடைக் காற்றும் பாவியேனுடலை அறுத்துக்கொண்டே உள்ளே புகுந்து துன்பப்படுத்தாநின்றது, சித்ரவதை பண்ணாநின்றது, அது செய்கிறவகைகள் லாசாமகோசரம்.
English Translation
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்