விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆரார் புகுதுவார்? ஐயர் இவர்அல்லால்* 
  நீராம் இதுசெய்தீர் என்றுஓர் நெடுங்கயிற்றால்* 
  ஊரார்கள் எல்லாரும் காண உரலோடே*
  தீரா வெகுளியள்ஆய் சிக்கென ஆர்த்துஅடிப்ப* 
  ஆரா வயிற்றினோடு ஆற்றாதான்* -- அன்றியும்

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தீரா வெகுளியள் ஆய் - அடங்காத கோபத்தையுடையளாய்
ஓர் நெடு கயிற்றால் - கையிலகப்பட்டதொருகுறுங் கயிற்றால்
ஊரார்கள் எல்லாரும் காண - ஊரிலுள்ளாரனைவரும் (இந்த எளிமையைக்) காணும்படியாக
உரலோடே சிக்கன ஆர்த்து அடிப்ப - ஒரு உரலோட அழுத்தக்கட்டி அடிக்க
ஆரா வயிற்றினோடு ஆற்றாதான் - மிகவும் வயிறெரிந்து வருந்தி நிற்பவன்

விளக்க உரை

நெடுங்கயிற்றால் – “கண்ணிநூண் சிறுத்தாம்பினால்“ என்றும் “கண்ணியார் குறுங்கயிற்றால் கட்ட“ என்றுமுள்ள ஸ்ரீஸூக்திகளோடு ஐககண்டியம் பண்ணவேண்டுதலால், இங்கு நெடுங்கயிறு என்றதை விபரீத லக்ஷணையாகக்கொண்டு சிறிய கயிறென்றே உரைத்தல் பொருந்தும். ‘அடிக்கடி இவள் நம்மைக் கயிற்றினால் கட்டி நலிகின்றாளே! என்று கண்ணபிரான் க்ருஹத்திலுள்ள கயிறுகளை யெல்லாம் துண்டு துண்டாக அறுத்துப்போட்டு விடுவது வழக்கமாம். ஆகவே நீண்டகயிறு யசோதைக்குக் கிடைப்பதரிது. அன்றியே, நெடுங்கயி றென்பதற்குப் பெரு மேன்மை பொருந்திய கயிறென்றும் பொருள் கொள்ளலாம், கண்ணபிரானுடைய திருமேனியிலே ஸம்பந்திக்கப் பெறுதல் கயிற்றுக்கு மேன்மை யென்க. (ஊரார்களெல்லாருங்காண) இவன் உரலோடு கட்டுண்டு படுகிற பரிபவத்தை எல்லாருங் காண – என்று பொருள் கொள்வர் ஸாமாந்ய ஞானிகள், அதுவன்று பொருள், இவன் இப்படி கட்டவு மடிக்கவு மெளியனாய் வாய்த்திருக்கும் இந்த ஸௌலப்யத்தை வெளியிட காணவேணுமென்றாய்த்து யசோதை கருதிற்று. இங்ஙனொத்த ஸௌலப்யத்தை வெளியிட வேணுமென்றுதானே கண்ணபிரான் இங்கே வந்து பிறந்தது. தாய் தாம்பாலே கட்டும் போது தாம்பு எட்டம் போராவிடில் இவன் தனது உடலைச் சிறுக்கடித்து அந்தச் சிறிய தாம்பினால் கட்டுண்டானாம்படி பண்ணிக்கொள்ளுமவனிறே, “கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்பண்ணிய பெருமாயன்“ என்ற விடத்தில் இதுவேயிறே கருத்து. தீராவெகுளியளாய் – வெகுளி – கோபம், இது அபிநயமாத்திரமென்க. “அஞ்சவு ரப்பாளசோதை ஆணாட விட்டிட்டிருக்கும்“ என்னப்பட்ட யசோதைக்குக் கோபம் மெய்யே உண்டாகமாட்டாதிறே. ஆரா வயிற்றினோடாற்றாதான் – உரலோடு பிணைத்ததற்கும் அடித்ததற்குமாக வருந்தின்ன்று வெண்ணெயையும் பெண்களையும் களவு செய்கிற தொழிலைச் சற்றுப் போது விட்டிருக்க நேர்ந்த்தே! என்று வருந்தினானென்க. அளவற அமுது செய்த வெண்ணெய் வயிற்றிலே ஜீரணமாகாமல் வருந்தினானென்னவுமாம்.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்