விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பகல்இரா என்பதுவும்*  பாவியாது,*  எம்மை- 
  இகல்செய்து இருபொழுதும் ஆள்வர்,*-தகவாத்-
  தொழும்பர் இவர்  சீர்க்கும்*  துணைஇலர் என்றுஓரார்,* 
  செழும்பரவை மேயார் தெரிந்து.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சீர்க்கும் துணை இலர் - சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்”
என்று தெரிந்து ஓரார் - என்பதை ஊன்றி ஆராயாதவனாய்
பகல் இரா என்பதுவும் பாவியாது இருபொழுதும் - பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும்
இகல் செய்து - வலிகட்டாயப்படுத்தி
எம்மை ஆள்வர் - அடியேனை அநுபவியா நின்றான்.

விளக்க உரை

எம்பெருமானுடைய அநுக்ரஹம் தம் மேல் அல்லும்பகலும் அமர்ந்திருக்கிறபடியை அருளிச்செய்கிறார். எம்பெருமான் என்னுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை நன்கு ஆராய்ந்திருப்பனாகில் என்னை ஒருபொருளாக நோக்குவதற்கே ப்ரஸந்தியில்லை; அவனுடைய திருவருளுக்கு இலக்காகமாட்டாத நீசன் அடியேன்; அவ்வளவேயோ? குணாநுபவம் பண்ணுவதற்குத்தக்க ஸஹயமுமில்லாதவனாயிருக்கின்றேன்; இப்படிப்பட்ட என்படிகளை எம்பெருமான் ஆராய்ந்திருப்பானாகில் என்னைக் கடாக்ஷிக்கவே மாட்டான்; இப்படிகளை ஆராயாமல், பகலென்று மிரவென்றும் பாராமல் எக்காலும் என்னை வலிகட்டாயப்படுத்தியிழுத்துத் தன் அநுபவத்தை எனக்குத் தந்தருளி என்னை அநுக்ரஹஞ் செய்கின்றான்- என்கிறார். இகல் செய்தல்- யுத்தம் பண்ணுதல்; எம்பெருமான் ஆழ்வாரோடு யுத்தம் பண்ணுகையாவது என்னென்னில்; தன்னுடைய குணங்களை அநுபவிக்குமாறு நிர்பந்தப்படுத்துதலாம். இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தி:- “தம்முடைய குணங்களாலே எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம்பண்ணி இரண்டுபோதும் ஆள்வர்; அம்புபட்ட புண்ணுக்கு மருந்தில்லையிறே.” இவர் தகவாத் தொழும்பர் தொழும்பர், சீர்க்கும் துணையிலர் என்று ஓரார்- ‘தொழும்பர்’ என்று அடிமை செய்பவர்க்குப் பெயர்; நீசர்களே அடிமைசெய்ய உரியவராதலால் இங்குத் ‘தொழும்ப’ என்றது நீச ரென்றபடி. தகவு என்று தயவுக்குப் பெயர்; ‘தகவன்’ என்றால் ‘தயவுக்கு விஷயமாகக் கூடியவன்’ என்று பொருளாம்; ‘தகவாத் தொழும்பர்’ என்றது- தயவுக்கு விஷயமாகக் கூடாத நீசர் என்றதாயிற்று. (சீர்க்கும் துணையிலர்.) ‘சீர்க்கும்’ என்றது துணைக்கு அடைமொழி; ‘சீர்மை பொருந்திய’ என்றபடி பகவத்கீதையிலே மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம்- கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திசரமந்திச.” (இதன் பொருள்- நெஞ்சை நமக்கென்றே பறிகொடுத்து, அப்படியே நம்மைப் பிரிந்தால் தரித்திருக்கமாட்டாமல் பிராணனையும் நம் அதீனஞ்செய்து தாம் தாம் அநுபவித்த நம் குணங்களையெடுத்து ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொண்டு அப்படியே நாம் செய்த திவ்ய சேஷ்டிதங்களையுமெடுத்துப் பசிக்கொண்டு ஆநந்திக்கிறார்கள்.) என்றருளிச் செய்திருப்பதில், பகவத் குணங்களை ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ளுதலும் ஒரு சிறந்த காரியமாகச் சொல்லப்பட்டுள்ளது; அப்படி பேசிக்கொள்வதற்குத் தாம் (ஆழ்வார்) துணைற்றவர் என்கிறார். இப்படியிருக்கச் செய்தேயும் எம்பெருமான் என்னை உபேக்ஷித்திடாமல் தனது நிர்ஹேதுக கருணையினால் குணாநுபவம் செய்விக்கிறானென்றாராயிற்று.

English Translation

The omniscient Lord reclining in the ocean will never consider anyone as lowly, underserving of grace, beyond redemption, Night and a day without end, he will give us the joy of service and accept us.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்