விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உள்ளிலும் உள்ளம் தடிக்கும்*  வினைப்படலம்,* 
  விள்ள விழித்துஉன்னை மெய்உற்றால்,*  -உள்ள-
  உலகுஅளவும் யானும்*  உளன்ஆவன் என்கொல்* 
  உலகுஅளந்த மூர்த்தி! உரை. 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

உலகு அளந்த மூர்த்தி - த்ரிவிக்ரம பகவானே,
உன்னை உள்ளிலும் - உன்னை(நெஞ்சில்) அநுஸந்தித்த மாத்திரத்திலும்
உள்ளம் - எனது நெஞ்சானது
துடிக்கும் - (ஸந்தோஷத்தினால்) பூரிக்கின்றது
வினை படலம் விள்ள - பாவங்களின் கூட்டங்கள் என்னை விட்டு ஒழிந்து போம்படி

விளக்க உரை

கீழ்ப்பாட்டிற் கூறியவடி எம்பெருமானை நெஞ்சால் அநுபவிக்கிற வளவிலேயே நெஞ்சு பூரித்துத் தடிக்கிறபடியைப் பார்த்தால், மெய்யே பரமபதத்திற்சென்ற பரிபூர்ண ப்ரஹ்மாநுபவம் பண்ணப் பெறில் உலகம் முழுவதையும் வியாபிக்கவல்லேனாம்படி குறைவின்றித் தடித்துவிடுவேன்போலுமென்கிறார். உள்ளிலும் உள்ளம் தடிக்கும் = பகவத் விஷயாநுஸந்தாநத்தினால் தமக்க உண்டாகிற ஆநந்தமிகுதியை அறிவிப்பதான அதிசயோகதியாமிது. உள்ளம் தடித்தலாவது நெஞ்சு ஸ்தூலிப்பதாம். உருவற்ற நெஞ்சுக்கு ஸ்தூலத்வம் அஸம்பாவிதமாபினும் ஸம்பாவிதம்போலப் பேசுவதன்கருத்து ஆநந்தமிகுதியைக் காட்டுவதேயாம். இவ் விருள்தருமாஞாலத்தில் ஒரு மூலையிலே திருப்புளியின் பொந்திலே யிருந்துகொண்டு உன்னை நெஞ்சால் நினைக்கம் மாத்திரத்திலேயே நெஞ்ச இப்படி பூரிக்கமேயானால், என்னுடைய கரும பாசங்களெல்லாம் அடியோடே தொலைந்தொழியும்படி பரிபூர்ண கடாக்ஷம் செய்தருளப்பெற்று நலமந்த மில்லதோர் நாட்டிலே வந்து நித்யாநுபவம் பண்ணப்பெற்றால் பின்னைத் தடிப்பதற்கு இடம் போராதுபோலும். ஸ்வரூபத்தாலே உலகத்தையெல்லாம் நீ எப்படிவியாபித்து நிற்கிறாயோ அப்படி நானும் ஸ்வபாவத்தாலே உலகமெங்கும் வியாபித்து நிற்பேன்போலும் என்கிறார். உலகத்தையெல்லாம் பூரிக்கவல்லதாம்படி உடல் தடிக்குமளவு ஆநந்தத்தை அடைந்திடுவேனன்றோ என்றவாறு.

English Translation

Lord who measured the Earth! When I think of you and fall into a trance, my heart swells with you inside, my karmas disappear. When I wake up and see reality I become a part of the vast universe that you are! How is this ? Tell me

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்