விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  புவியும் இருவிசும்பும் நின்அகத்த,*  நீஎன்- 
  செவியின் வழிபுகுந்து*  என்உள்ளாய்,*-அவிவுஇன்றி-
  யான்பெரியன் நீபெரியை*  என்பதனை யார்அறிவார்,* 
  ஊன்பருகு நேமியாய்! உள்ளு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

புவியும் - இவ்வுலகமும்
இரு விசும்பும் - விசாலமான மேலுலகமும்
என் உள்ளாய் - என் பக்கல் இரா நின்றாய்:
யான் பெரியன் - நானே பெரியவன்;
நின் அகத்த - உன்னிடத்தேயுள்ளன;

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “ஒன்றுமிரங்காருருக்காட்டார்” என்று வெறுத்துரைத்த ஆழ்வாரைநோக்கி எம்பெருமான் “நீர் ஏனிப்படிவருந்துகின்றீர்; உமக்கு நாம் அருளாதிருக்கிறோமோ? உருக்காட்டாதிருக்கிறோமோ? ‘கல்லும் கனைகடலும் வைகுந்தவானாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்-வெல்ல, நெடியான் நிறங்கரியானுள் புகுந்து நீங்கான், அடியேனதுள்ளத்தகம்?’ (68) என்று உம்வாயாலேபேசினதும் மறந்தொழிந்ததோ? உகந்தருளினவிடங்களெல்லாவற்றையும் விட்டிட்டு உம்முடைய நெஞ்சிலேயன்றோ நாம் நித்யஸந்நிதிபண்ணியிருக்கிறது” என்றருளிச்செய்ய, ஆழ்வார் அது கேட்டுத்தெறி ஆநந்தத்துக்குப் போக்குவீடாக அப்பெருமானோடே போராடுகிறாரிதில். எம்பெருமானே! கீழுலகங்களும் மேலுகங்களுமாகிய வெல்லாம் உன்னிடத்தேயுள்ளன; அப்படி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டிராநின்ற நீ என் காது வழியாக என்னுள்ளே புகுந்து பேராமலிருக்கின்றாய்; ஆனாலும் ‘ப்ரஹ்மம்’ என்ற உனக்குப் பேராயிருக்கிறது. எது எல்லாவற்றிற்காட்டிலும் பெரிதான வஸ்துவோ அது ப்ரஹ்மமென்னத்தகும்; விபூதிகளைமாத்திரம் வஹித்துக்கொண்டிருக்கிற நீ பெரியவனா? அல்லது, விபூதிகளை வஹிகிறவுன்னையுங்கூடச்சேர்த்து வஹிக்கிற நான் பெரியவனா? என்று ஆராயவேண்டாவோ? இதனை நன்கு ஆராய்ந்தால் நானே மிகப் பெரியவனானவேன்; என்னுள்ளே ஒரு மூலையிலே அடங்கிக் கிடக்கவல்ல உன்னைப் பெரியவனென்று சொல்ல வொண்ணுமோ? இதனை நீயே ஆராய்ந்து பார்- என்கிறார். “யான் பெரியன்” என்று தனி வாக்கியமாகவும் “நீ பெரியையென்பதனை யாரறிவார்” என்று தனிவாக்கியமாகவும் கொண்டு உரைக்கப்பட்டது. இங்ஙனன்றியே இரண்டையும் சேர்த்து ஏக வாக்கியமாகவே உரைத்தலுமொக்கும். ‘நான் பெரியவனோ நீ பெரியவனோ, இதைப் பிறரால் அறியப்போகாது; நீ தான் ஆராய்ந்து அறியவேணும்’ என்கை.

English Translation

O Lord wielding a discus that minces flesh! The Earth-world and the sky-world are within you. You have entered into me through my ears, quietly without my knowing. Am I bigger than you or are you bigger than me? Who knows this? Tell me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்