விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  முதல்ஆம் திருஉருவம் மூன்றுஅன்பர்,*  ஒன்றே- 
  முதல்ஆகும்*  மூன்றுக்கும் என்பர்*- முதல்வா,-
  நிகர்இலகு கார்உருவா!*  நின்அகத்தது அன்றே,* 
  புகர்இலகு தாமரையின் பூ? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முதல்வா - ஸகலகாரண பூதனான பெருமானே!
மூன்று திரு உருவம் முதல் ஆம் என்பர் - பிரமன் விஷ்ணு சிவன் என்கிற மூன்று திவ்ய மூர்த்திகள் தலைவராவர்’ என்று சிலர் சொல்லுவார்கள்;
மூன்றுக்கும் ஒன்றே முதல் ஆகும் என்பர் - ‘மேற்சொன்ன மூன்று மூர்த்திகளுக்கும் வேறொரு தத்துவம் தலையாயிருக்கும்’ என்று மற்றுஞ் சிலர் சொல்லுவார்கள்.
நிகர் இலகு கார் உருவா - மேகமொன்று சொல்லலாம்படி அதனோடொத்து விளங்காநின்ற திருமேனியை யுடையவனே!
புகர் இலகு தாமரையின் பூ - தேஜஸ்ஸுமிக்கு விளங்குகின்ற தாமரைப் பூவானது

விளக்க உரை

உரை:1

கீழ்ப்பாட்டில் பிரமனுடையவும் சிவனுடையவும் பேச்சு வந்தமையாலே பரத்வ விஷயமாகப் பிறர் சொல்லுகிற வாதங்கள் நினைவுக்கு வந்து, அவற்றைத் தள்ளி ஸித்தாந்தம் அருளிச் செய்கிறாரிதில். (முதலாந்திருவுருவம் மூன்றென்பர்.) ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் என்கிற மூன்று மூர்த்திகளும் துல்யமாகவே உலகுக்குத் தலைவர்கள் என்று கொள்ளுகிற சிலருடைய கொள்கையை இதனால் அநுவதித்தபடி, அரி அயன் அரன் என்கிற மும்மூர்த்திகளும் பரஸ்பரம் ஏற்றத்தாழ்வின்றியே ஸமாநராயிருப்பரென்று சிலர் சொல்லுவார்கள்- என்றவிதனால் அது ஸ்வஸித்தாந்தமல்ல, பரபக்ஷம் என்பது விளங்கும். (ஒன்றே முதலாகும் மூன்றுக்குமென்பர்.) உத்தீர்ணவாதிகனென்று சிலருண்டு; அவர்களுடைய கொள்கை இது; ப்ரஹ்ம விஷ்ணு ருத்ரர்களிற்காட்டில் வேறுபட்ட நான்காவது தத்துவம் ஒன்றுண்டு; அதுவே இம்மூன்று தத்துவங்கட்கும் நிர்வாஹகமாகனது என்பராமவர்கள்; அவர்கள் துரீய ப்ரஹ்மவாதிகளெனப்படுவார்கள். அவர்களுடைய பக்ஷமும் ஸ்வஸித்தாந்தமல்லவென்று இதனால் காட்டப்பட்டது. ஸ்ரீமந்நாராயணனொருவனே பரதத்துவமென்பது தோன்ற முதல்வா! என விளிக்கின்றார் காண்மின். ஸேவிக்கும்போதே ஸகலதாபங்களும் ஆறும்படியான திருமேனிகொண்ட தெய்வமே பரதத்துவம் என்பது விளங்க நிகரிலகுகாருருவா! என்றும் விளிக்கின்றார். “ஒருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்று மாகடலுருவம் ஒத்துநின்ற, மூவுருவுங் கண்டபோது ஒன்று ஆங்சோதி முகிலுருவமெம்மடிகளுருவந்தானே” என்று திருமங்கையாழ்வாரும் திருநெடுந்தாண்டகத்தில் பரதத்துவநிர்ணயம் பண்ணும் பாசுரத்தில் அருளிச் செய்தமை காண்க. ஸ்ரீமந்நாராயணனே பரத்துவமென்பது நன்கு பொருந்துமாறு விஷயம் காட்டுகிறார் நின்னகத்ததன்றே புகலிலகு தாமரையின்பூ என்பதனால் சிவன் பிரமனிடத்துத் தோன்றியவனென்றும்; அந்தப் பிரமன் உனது திருநாபிக் கமலத்தில் தோன்றியவனென்றும் காஸ்த்ரங்களிற் சொல்லியிருக்கும்போது அந்தத் தாமரையைத் திருநாபியிலேயுடைய நீயேயன்றோ பரதத்துவமாக இருக்கத் தகதியுண்டென்ற காட்டியவாறு.

உரை:2

எல்லாவற்றிற்கும் முதன்மையானது பிரம்மா விஷ்ணு சிவன் என்று மூன்று உருவம் சொல்வார்கள். சிலர், இந்த மூன்றுக்கும் மேற்பட்ட துரியபிரம்மம் என்று ஒன்று சொல்கிறார்கள். கரிய உருவம் கொண்ட மாலே, உன் உந்தியிலிருந்து தாமரைப்பூ வந்து அதிலிருந்து பிரமன் வந்து அதிலிருந்து படைப்புகள் வந்ததால் நீதானே முதல்வன் என்பது தௌ¤வல்லவா!

English Translation

They say the Tri-murti is foremost of all. They say that the three originated from the one first-cause. O First-cause dark lord with Siva on your person! Does not the radiant lotus of Brahama too originate in you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்