விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கல்லும் கனைகடலும்*  வைகுந்த வான்நாடும்,* 
  புல்என்று ஒழிந்தனகொல்? ஏபாவம்,*  -வெல்ல-
  நெடியான் நிறம்கரியான்*  உள்புகுந்து நீங்கான்,* 
  அடியேனது உள்ளத்து அகம். 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கல்லும் - திருவேங்கடமலையும்
கனை கடலும் - கோஷிக்கின்ற திருப்பாற்கடலும்
வைகுந்தம் - வைகுண்டமென்கிற
வான் நாடும் - வானுலகமும்
புல்லென்று ஒழிந்தன கொல் - அல்பமாய் விட்டன போலும்;

விளக்க உரை

கீழ் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு ஹிதம் உபதேசித்தார். அந்த உபதேசத்திற்கு நெஞ்சு உடன்பட்டிருந்த தன் பலன் உடனே கைபுகுந்தபடியை இது முதல் மூன்று பாசுரங்களாலே பேசுகிறார். எம்பெருமான் திவ்யமங்களவிக்ரஹத்தோடே தமது நெஞ்சிலே புகுந்து ஸ்திரப்திஷ்டையாக இருக்கும்படியைப் பேசுகிறாரிதில். வெல்ல நெடியான் = ‘வெல்ல’ என்றது (மிகவும்) என்றபடி. நாமாக எவ்வளவு முயற்சி செய்தாலும் நமக்கு எட்டாதிருப்பவன் என்கை. அவன் தானே தன்னருளாலே எளியனாகில் தடை செய்வாரில்லாமையாலே நிர்ஹேதுக க்ருபையாலே வந்து புகுந்தானென்கிறது. (வெல்ல- வெல்வதற்கு, நெடியான்- முடியாதவன்; ஒருவராலும் ஜயிக்க முடியாதவன் என்று பொருள்கூறுதல் சிறவாது.) வந்து புகுந்ததாகத் தோன்றிவிடுதல் மாத்திரமல்ல; மெய்யே வந்து புகுந்தானென்கைக்காக நிறங்கரியான் என்று திருமேனியையுங்கண்டறிந்து பேசுகிறார் போலும். பிராட்டியானவள் எம்பெருமானுடைய திருமார்பிலே வந்து சேர்ந்து “அகலகில்லேனிறையும், அகலகில்லேனிறையும்” என்று தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “அகலகில்லேனிறையும், அகலகில்லேனிறையும்” என்று தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “நான் இதனைவிட்டு நீங்கேன், நான் இதனைவிட்டு நீங்கேன்” என்று உருகிச்சொல்லிக்கொண்டு கிடக்கிறானென்பது தோன்ற, “உள்புகுந்து நீங்கான்” என்று அருளிச்செய்யுமழகு காண்மின். எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், கோயில் திருமலை பெருமான்கோயில் முதலான உகந்தருளினவிடங்களிலும் இருப்பதிற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதயகமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகின்றானெற்றும், ஆகவே பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே புருஷார்த்தமாயிருக்குமென்றும், இது ஸித்தித்துவிட்டால் பரமபதம் முதலியவற்றில் வாஸம் செய்வதில் ஆதரம் மட்டமாய் விடுமென்றும் ஸ்ரீவசநபூஷத்தில் பிள்ளையுலகாசிரியர் பரமரஸமாக அருளிச்செய்ததெல்லாம் இப்பாசுரத்தின் முன்னடிகளை மூலமாகக் கொண்டேயென்றுணர்க. “கல்லும் கனைகடலும் வைகுந்தவனாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்!” என்ற இப்பாசுரத்தின் உருக்கத்தை என்சொல்வோம்? இப்படிப்பட்ட ஈரச்சொற்கள் பாவியோமான நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்படப் பெறுவதே! ஆழ்வாருடைய அநுபவம் எங்கே? நாம் எங்கே? அவ்களுடைய அருளிச் செயலுக்கும் நமது நாவுக்கும் எவ்வளவோ தூரமுண்டு. ஆயினும், ஏதோ பாக்யவிசேஷத்தாலே நமது வாயிலும் இத்தகைய பாசரங்கள் பொருள் தெரிந்தோ தெரியாமலோ சற்றுப்போது நுழைந்து புறப்படும்படியாக வாய்ப்பது இவ்விருள் தருமாஞாலத்திடைய பெற்றதொரு கனத்தபேறாம். ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் இரவில் பள்ளிக்கொள்ளும்போது இப்பாசுரத்தைப் பலகால் அநுஸந்திக்க வேணுமென்பது பெரியோர்களின் உபதேசம்.

English Translation

The supreme Lord of dark hue has entered my lowly heart, never to leave. Wonder if his mountain abode, ocean abode, sky abode, and Vaikunta abode have become desolate wastelands! What a pity!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்