விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பரன்ஆம் அவன்ஆதல்*  பாவிப்பர் ஆகில்,* 
  உரனால் ஒருமூன்று போதும்,*  -மரம்ஏழ்அன்று-
  எய்தானை*  புள்ளின்வாய் கீண்டானையே,*  அமரர்- 
  கைதான் தொழாவே கலந்து? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பாவிப்பர் ஆகில் - அநுஸந்திப்பர்களேயானால்
அமரர் கை - தேவர்களின் கைகளானவை
கலந்து - ஒன்றுசேர்ந்து
ஒரு மூன்று போதும் - எப்போதும்
தொழாவே - ஸேவிக்க மாட்டாவோ.

விளக்க உரை

மரமேழன்றெய்தானை என்பதனால் ஸ்ரீராம வதாரத்தையும், புள்ளின்வாய்கீண்டயானை என்பதனால் ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தையும் குறித்தது- மற்றும் இப்படிப்பட்ட பல விபாவாவதாரங்களையுங்காட்டினபடி “அமரர்கைதான் தொழாவே கலந்து” என்பதற்கு இங்கு நாம் உரைத்த பொருளாவது- ‘மநுஷ்யாவதாரம் பண்ணின எம்பெருமான் திறத்திலும் பரத்வபுத்தியை யார் வஹிக்கின்றார்களோ அவர்களை அமரர்கள் கையெடுத்துக் கும்பிடுவார்கள்’ என்று உரைத்தோம். மூலத்தின் நிலைமைக்கு நன்கு சேரும்படி வேறொருவகையாகவும் உரைக்கலாம்;- அமரர் என்றது அஹங்காரிகளான தேவதைகளைச் சொன்னபடியாய்; ஸம்ஸாரிகள் விபவாவதாரங்களிலெம்பெருமான்களை அலக்ஷிய் செய்யாமல் பரத்வத்தையே பாவித்துப் பணிந்திருப்பர்களாகில் அஹங்காரிகளான தேவர்களும் தங்களுடைய அஹங்காரத்தை யொழித்துவிட்டுக் கூடவே தொழுது உஜ்ஜீவித்திருப்பர்களன்றோ? என்றுரைக்கவுமாம். மரமேழன்றெய்த வரலாறு:- ஸுக்ரீவன் இராமனால் அபயப்ரதானஞ் செய்யப்பெற்ற பின்பும் மனம் தெளியாமல் வாலியின் பேராற்றலைப்பற்றிப் பலவாறு சொல்லி, வாலி மராமரங்களைத் துளைத்ததையும், துந்துபியின் உடலெலும்பை ஒரு போஜனை தூரம் தூக்கி யெறிந்ததையும் குறித்துப் பாராட்டிக் கூறி, இவ்வாறு பேராற்றலமைந்தவனைவெல்வது ஸாத்யமாகுமோ? என்று சொல்ல அது கேட்ட லக்ஷ்மணன் ‘உனக்கு விச்வாஸம் இல்லையாயின் இப்போது என்ன செய்ய வேண்டுவது?’ என்ற, ஸுக்ரீவன் ‘இராமபிரான் நீறுபூத்த நெருப்புபோலத் தோன்றினும் வாலியின் வல்லமையை நினைக்கும்போது ஸந்தேஹமுண்டாகின்றது; எழுமரா மரங்களையும் துளைத்து இந்தத் துந்துபியின் எலும்பையும் இருநூறு விரற்கடை தூரம் தூக்கியெறிந்தால் எனக்கு நம்பிக்கையுண்டாகும்’ என்று சொல்ல; ஸுக்ரீவனுக்கு நம்புதலுண்டாக்காமறு அவனது வார்த்தைக்கு இயைந்து இராமபிரான் துந்துபியின் உடலெலும்புக்குவியலைத் தனது காற்கட்டை விரலினால் இலேசாய்த் தூக்கிப் பத்து போஜனை தூரத்துக்கு அப்பால் எறிய, அதனைக் கண்ட ஸுக்ரீவன் ‘முன்பு உலரா திருக்கையில். வாலி இதனைத் தூக்கியெறிந்தான்; இப்போது உலர்நதுபோன இதனைத் தூக்கி யெறிதல் ஒரு சிறப்பன்று’ என்று கூற, பின்பு இராமபிரான் ஒரு பாணத்தை ஏழு மராமரங்களின்மேல் ஏவ,அது அம்மரங்களைத் துளைத்ததோடு ஏழுலங்கங்களையும் துளைத்துச் சென்று மீண்டும் அப்றாத் தூணியை அடைந்தது- (மராமரம்- ஆச்சாமரம்.)

English Translation

If the gods had realised the transcendent Lord in the Avataras of Rama when he pierced seven trees, and Krishna when he tore apart the beaks of the bird-Asura Baka, would they not have offered flowers worship with folded hands thrice a day?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்