விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மீன்என்னும் கம்பில்*  வெறிஎன்னும் வெள்ளிவேய்* 
  வான்என்னும் கேடுஇலா வான்குடைக்குத்,*  -தான்ஓர்-
  மணிக்காம்பு போல்*  நிமிர்ந்து மண்அளந்தான்,*  நங்கள்- 
  பிணிக்குஆம் பெருமருந்து பின்.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வான் என்னம் - ஆகாசமென்கிற பெயருடையதும்
கேடு இலா - ஒருநாளும் அழிவில்லாததுமான
வான் குடைக்கு - பெரிய குடைக்கு
ஓர் மணி காம்பு போல் நிமிர்ந்து - ஒப்பற்ற நீல மணி மயமான காம்பு போல வளர்ந்து
மண் அளந்தான் தான் - உலகளந்தவனான பெருமாள்

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் “இறைமுறையான் சேவடிமேல் மண்ணளந்தவந்தந்நாள்” என்று உலகளந்த வரலாற்றைச் சிறிது பிரஸங்கிக்கவே, பின்னையும் அதனை ஒருவாறு வருணித்ததுப்பாசுரங்பேச விருப்பமுண்டாகி ரூபகாலங்கார (உருவகவணி) ரீதியிலேர அருளிச்செய்கிறார். எம்பெருமான் பண்டு உலகளப்பதற்காக ஒரு திருவடியை ஆகாசததேறத் தூக்கினது எங்ஙனே சொல்லலாம்படியிருக்கின்ற தென்றால் ஆகாசமாகிற ஒரு பெரிய குடைக்கு நீலரத்நமயமான காம்பு கோப்பது போல் போசலாயிருந்ததென்கிறார். ஆகாசத்ததைக் குடையாக்க கூறுதற்கு உள்ள பொருத்தங்களை முதலடியிற் கூறுகின்றார். மீனென்னும் கம்பின் = உலகத்தில் சிறந்த குடையானது முத்துக்களழுத்தின பல கம்புகளையுடைத்தாயிருக்கும்; ஆகாசமும் பல பல நக்ஷத்திரங்கள் விளங்கப்பெற்றிருக்கையாலே, தனித்தனி நக்ஷத்ரங்கள் முத்துக்கள் போலவும். நக்ஷத்ரஸமுக்ஷங்கள் முத்துக்கள் அழுத்தின கம்புகள் போலவும் காணப்படாநின்றன. (முத்துக்களுக்கு வாசகமான பதம் மூலத்தில் இல்லை யெனினும், மீன் என்று நக்ஷத்திரங்களைச் சொன்னதற்கிணங்க உபமேய கோடியில் முத்துக்கள் விவக்ஷிதமென்க.) கம்பாவது - குடையின் மேல் துணியைத் தாங்குவதற்காகப் போடும் கம்பிகள். வெறியென்னும் வெள்ளிவேய் = வெறி என்று வட்ட வடிவத்திற்குப் பெயர்; அஃது இங்க இலக்கணையால் சந்திரனைக் குறிக்கின்றது. குடைக்காம்பின் நுனியில் வெள்ளிக்குழை போடுவதுண்டே; ஆகாசமாகிற இக்கடைக்குச் சந்திரன் வெள்ளிக்குழை போன்றுளனாம். ஆக இவ்வகைகளாலே குடையென்று சொல்லத்தக்கதும், சில நாளிருந்து அழிந்துபோகும் குடை போலன்றியே சாச்வதமாயிருக்கக்கூடிய குடையென்று சொல்லத்தக்கதுமான ஆகாசத்திலே நீலமணி மேனியனான எம்பெருமானுடைய திருவடி நீண்டு சொருகப்பெற்றநது மணிக்காம்பு கோத்தது போலலாகுமிறே. ஆகவே, ஆகாசத்மாகிற குடைக்குத் தனது திருவடியாகிற காம்பைக் கோப்பதென்பகிற வியாஜத்தினால் இருவிசும்பினூடுபோயெழுந்து மேலைத்தண்மதியும் கதிரவனும் தவிரவோடித் தாரகையின் புறந்தடவியப்பால்மிக்கு மண் முழுதுமகப்படுத்து நின்றவெந்தையானவன் நமது ஸம்ஸாரமாகிற கொடிய வியாதியை ஒழிக்கவல்ல சிறந்த மருந்தாயிருப்பவன் - என்றாராயிற்று.

English Translation

The stars became the spokes, the planets became the frills, the sky became the umbrella, the Lord himself grew and became its stick. When the manikin Lord measured the Earth. He is also the medicine for all our sicknesses.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்