- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
காணொளி
பதவுரை
விளக்க உரை
ஆழ்வார் இவ்விருள் தருமாஞாலத்தின் தன்மைகளைச் சிந்திக்கிறபோது ஒன்றுந்தோன்றாமல் ஆகாசத்தை நோக்கிக் கிடப்பண்டு; “நலத்தால்மிக்கார் குடத்தைக் கிடந்தாய்! உன்னைக் காப்பான் நானலாப்பாய் ஆகாயத்தை நோக்கியழுவன் தோழுவனே” என்ற திருவாய்மொழியில் அருளிச்செய்தபடியே ஆகாசத்தை நோக்க நேருவதுமுண்டு; ஏதோவொரு காரத்தினால் ஆகாசத்தை நோக்கினார் ஆழ்வார்; ஆகாசமடங்கலும் நக்ஷத்ரமயமாகக் காணப்பட்டது; உலகத்தில் எந்த வஸ்துவைக் கண்டாலும் பகவத்ஸம்பந்தத்தை முன்னிட்டே அந்த வஸ்துக்கள் ஆழ்வாருடைய திருவுள்ளத்திற்க விஷயமாகுமேயன்றி ஸாமாந்யமான லௌகிக் வஸ்துவாக விஷயமாகாதரகையாலே இந்த நக்ஷத்ரங்களிலும் பகவத்ஸம்பந்தத்தை முன்னிட்ட உத்ப்ரேக்ஷை திருவுள்ளத்திற்படவே அந்த அத்ப்ரேக்ஷையை இந்தப் பாசுரத்தினால் வெளியிடுகிறார். எம்பெருமான் முன்பு உலகளந்தருளின காலத்திலே மேலுலகத்திலுள்ளறாரெல்லாருங்கூடி அப்பெருமானது திருவடியின் மேல் புஷ்பங்களைத் தூவினார்களன்றோ; அந்தப்பூகஙகள் போன்றுள்ளன இந்த நக்ஷத்திரங்கள் என்று உத்பரேக்ஷித்தபடி. நக்ஷத்திரங்கள் சிறமுல்லைப்பூக்கள் போலேயிருத்தலாலும், விஷ்tபதமென்னப்படுகிற ஆகாசத்திலே நிரம்பியிருக்கையாலும், ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே எப்போதும் உலகளந்தவரலாற ஊன்றிக்கிடக்கையாலும் இங்ஙனே உத்ப்ரேக்ஷிக்கலாயிற்று. இப்பாட்டின் வியாக்கியானத்திலே - “லோக யாத்ரையை அநுஸந்திக்கப்புக்காலும் அவனைமுன்னாகவல்லது காணமாட்டாமை சொல்லுகிறது.” என்றும்; “சிறியாச்சான் ‘சபங்தாதி விஷயங்களில் நின்றும் நாம் மீள மாட்டாதாப்போலே ஆழ்வார்கள் பகவத் விஷயத்தில் நின்றும் மீளமாட்டார்கள்’ என்று பிள்ளைக்குப் பணித்தான்” என்றும் உள்ள ஸ்ரீஸூக்திகள் அநுஸந்திக்கத்தக்கன.
English Translation
When the Lord extended his foot into the sky, the stars below looked like myriads of pollen-dusted flowers strewn by the gods in hordes who dusted flowers strewn by the gods in hordes who came and offered worship with proper chants.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்