விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பேர்ந்துஒன்று நோக்காது*  பின்நிற்பாய் நில்லாப்பாய்* 
  ஈர்ந்துழாய் மாயனையே என்நெஞ்சே,*  -பேர்ந்துஎங்கும்-
  தொல்லைமா வெம்நரகில்*  சேராமல் காப்பதற்கு* 
  இல்லைகாண் மற்றோர் இறை.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நரகில் - நரகத்திலே
சேராமல் - போய்ப்புகாமல்
காப்பதற்கு - நம்மை ரக்ஷிப்பதற்கு
பேர்ந்து மற்று ஓர் இறை - வேறொரு ஸ்வாமி
எங்கும் இல்லை காண் - ஓரிடத்திலுமில்லைகிடாய்.

விளக்க உரை

வல்வினைகள் தம்மை அடர்க்க நினைக்கிறபடியைப் பேசினார் கீழ்ப்பாட்டில்; அவை அடர்ந்தாலும் தம்முடைய அத்யவஸாயம் ஒரே உறுதியாயிருக்கும்படியைப் பேசுகிறாரிதில். நெஞ்சே! திருத்துழாய்மாலையை அணிந்தள்ள திருமாலின் போய்வதையில் நீ பழகினவனன்றோ? உனக்கு நான் பதிதாக உபதேசிக்க வேண்டுவதன்றே? அந்த போக்யதையில் நீ யீடுபட்டு வேறு எந்த வஸ்துவிலும் கண் செலுத்தாமல் அவ்வெம்பெருமானொருவனையே பின்பற்றி நிற்க வேண்டியது உன் கடமை; இந்த ஸ்வரூபம் கெடாதபடி நின்றாலும்நில்லு; நிற்காமல் லிஷயாந்தாங்களைப்பற்றி முடிந்து போவதானாம் போ; உன்னை நான் நிர்ப்பந்திக்கமாட்டேன்; ஆனால், நம்மை நரகத்துக்குப் போகாதபடி தடுத்துக் காத்தருளவல்ல கடவுள் அவனைத் தவிர வேறொருவன் எங்குமில்லையென்பதை மாத்திரம் உனக்கு உறுதியாய்ச் சொல்லுவேன்; இதனை விச்வஸித்து நீ அப்பெருமானையே அநுவர்த்தித்து உஜ்ஜீவிப்பாயாகில் உகக்கிறேன்; இல்லையாகில் தான்தோன்றியான நெஞ்சு போகிறபடி போய்த்தொலையட்டும் என்று வெறுத்திருக்கிறேன் = என்றராயிற்று. தொல்லைமாவெந்நரகில்= நித்யவிபூதியென்று சொல்லப்படுகிற பரமபதம் மாத்திரமேயன்றோ ஆதியந்தமற்றது; நரகமும் அப்படிப்பட்டதோ? தொல்லைநரகம் என்னலாமோ? என்று சிலர் சங்கிப்பர்கள்; பகவத் கீதையில் = சுக்லக்ருஷ்ணகதீ ஹ்யதே ஜகதச் சாச்வதேமதே” என்று இரண்டுமே நித்யமாகச் சொல்லப்பட்டுள்ளமை காண்க. பரம பதஞ் சென்றவர்கள் திரும்பி வருதலில்லாமையால் அதனை விசேஷித்து நித்யவிபூதியென்கிறது. ஸ்தாநம் நித்யமென்பது இரண்டுக்குமொக்கும். காப்பதற்கு இல்லைகாண் மற்றொரிறை = “எருத்துக் கொடியுடையானும் பிரம்மனுமிந்திரனும் மற்றுமொருத்தரும் இப்பிறவியென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை” என்று பெரியாழ்வார் திருமொழியும், “நீளரவைச் சுற்றிக்கடைந்தான் பெயரன்றே தென்னரகைப்பற்றிக் கடத்தும் படை” என்ற பொய்கையாற்பாசுரமும் இங்கு அநுஸந்திக்கத்தக்கன.

English Translation

O Heart! Without shifting your attention to anything else, go on contemplating the sweet Tulasi garland Lord if you will, or leave, if you will not. But know that there is no other god who can ensure your protection against the terrible miseries of hell.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்