விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மாலே! படிச்சோதி மாற்றேல்,*  இனிஉனத 
  பாலேபோல்*  சீரில் பழுத்தொழிந்தேன்,*  -மேலால்-
  பிறப்புஇன்மை பெற்று*  அடிக்கீழ்க் குற்றேவல் அன்று,* 
  மறப்புஇன்மை யான்வேண்டும் மாடு?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பிறப்பு இன்மை பெற்று - வீடுபெற்று
அடி கீழ் - (உனது) திருவடிவாரத்திலே
குற்றவேல் - கைங்கரியம் பண்ணுவது
யான் வேண்டும் மாடு அன்று - அடியேன் அபேஷிக்கிற செல்வமன்று;
படிசோதி - (உன்னுடைய) திவ்யமங்கள விக்ரஹ தேஜஸ்வை

விளக்க உரை

“அவணன்றன்னை மார்விடந்தமால் - வழித்தங்க வல்வினையை மாற்றானோ நெஞ்சே!” என்று தமது நெஞ்சை நோக்கி ஆழ்வார் சொன்னதை எம்பெருமான் கேட்டருளி ‘ஆழ்வீர்! நான் * வழித்தங்குவல்வினையை மாற்றுவது மாத்திரமோ செய்வேன், உம்மைப் பரமபதத்திலே கொண்டு சேர்ப்பதும் செய்வேன்காணும்’ என்றருளிச் செய்ய; அதுகேட்ட ஆழ்வார் ‘பிரானே! அடியேன் பரமபதத்தை விரும்புகின்றேனல்லேன்; இதுவரை * மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்ததுபோலவே இன்னமும் பலபிறவிகள் பிறக்கப்பெறினும் வருத்தமில்லை; அடியேனை இனிப் பிறவாதபடி பண்ணித் திருநாட்டிலே வைத்து அத்தாணிச் சேவகத்திற்கு ஆளாக்கிக்கொள்ள வேணுமென்று வேண்டுகின்றேனல்லேன்; நீ என்னை மறவாதிருக்க வேணும், உன்னை நான் மறவாதிருக்கவேணுமென்னு மித்தனையே அடியேன் விரும்புவது. நீ என்னை மறாவதிருக்கையாவது - உன்னுடைய திவ்யாத்தகுணங்களையும் திவ்யமங்கள் விக்ரஹகுணங்களையும் இப்போது நானநுபவிக்குமாற எங்ஙனே அருள் செய்திருக்கிறாயோ இப்படியே மேலுள்ள காலமும் அருளி செய்கையேயாம்; உன்னை நான் மறவாதிருக்கையாவது- இப்போது உன்னை அநுபவிப்பது போலவே எந்நாளும்மநுபவிக்கையாம். ஆக இவ்வளவே அடியேன் பிரார்த்திக்கும் ஸம்பத்து - என்கிறார். மாரே! படிச்சோதி மாற்றேலினி = படி என்று திருமேனிக்குப் பெயர்; அதனடைய சோதியை மாற்றவேண்டா என்றது - உனது திருமேனியின் ஒளியை இப்போது நான் அநுபவித்துக் கொண்டிருப்பது போலவே என்றைக்கும் மாறாமல் அநுபவித்துக் கொண்டேயிருக்கும்படி அருளி புரிய வேணுமென்றபடி. உனது பாலேபோல் சீரில் பழுத்தொழிந்தேன் = உன்னுடைய பரமபோக்யமான திருக்குணங்களிலே நன்றாக ஆழ்ந்துவிட்டேன் என்கை ஆதலால் எனக்குக் குணாநுபவம் முக்கியமே யொழிய, கைங்கரியம் அவ்வளவு முக்கியமன்று என்று காட்டினவாறு. பிறப்பின்மை - பிறவாமை; அதாவது ஸம்ஸாரநிவ்ருத்தி; பரமபதத்தைச் சொன்னபடி. அங்கே சென்று குற்றேவல் செய்கையாகிற செல்வத்தை அடியேன் வேண்டவில்லை; எங்கிருந்தாலும் உன் திருக்குணங்களை மறவாமலிருக்குமத்தனையே வேண்டுவது. பரமபதம் சென்று அங்கே நித்ய கைங்கரியம்பண்ணவேணுமென்கிற அளவற்ற ஆசையும் * மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்ததில் வருத்தமும் வெறுப்பும் ஆழ்வார்க்குப் பூர்த்தியாக இருக்கச் செய்தேயும் இப்பாட்டில் இப்படி அருளிச்செய்வது ஒருவகைச் சமத்காரமேயென்க. இருக்கிறவரையில் எம்பெருமானை மறவாதிருத்தல் நன்று என்கிற சாஸ்த்ரார்த்தத்தைஇதனால் வெளியிட்டபடி. “அவிஸ்ம்ருதிஸ்த்வச் சரணாரவிந்தே பவேபவே மேஸ்து பவத் ப்ராஸாதாத்” என்ற முகுந்தமாலையை அங்கே அநுஸந்திப்பது.

English Translation

Adorable Lord! Never again must you remove you radiant frame from my heart. I have grown to love your glory flood, sweet as milk, I seek, -not the freedom from rebirth, continuous service at your feet, -but only that I may never forget you.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்