விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வழித்தங்கு வல்வினையை*  மாற்றானோ? நெஞ்சே,* 
  தழீஇக்கொண்டு போர்அவுணன் தன்னை,*  -சுழித்துஎங்கும்-
  தாழ்வுஇடங்கள் பற்றி*  புலால்வெள்ளம் தான்உகள,* 
  வாழ்வுஅடங்க மார்வுஇடந்த மால்?   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

போர் - யுத்த பூமியிலே
அவுணன் தன்னை - இரணியாசுரனை
தழீஇக் கொண்டு - அழுந்தக் கட்டிக்கொண்டு,
புலால் வெள்ளம் - ரத்த ப்ரவாஹமானது
தாழ்வு இடங்கள் பற்றி - பள்ள நிலங்கள் பக்கமாக

விளக்க உரை

இவ்விருள் தருமாஞாலத்தில் உள்ளவரைக்கும் ப்ரதிபந்தகங்கள் மேலிட்டுக்கொண்டேயிருக்குமே! என்று ஆழ்வாருடைய நெஞ்சு தளும்ப. அதனை ஆழ்வார் ஸமாதானப்படுத்துகிறோமோ அவ்வெம்பெருமானுடைய சக்தி எப்படிப்படட்து தெரியுமோ வுனக்கு? ஆச்ரிதனான ஒரு ப்ரஹ்லாதனுக்குப் பக்ஷபாதியாயிருந்து அவனுடைய ப்ரபல ப்ரதிபந்தகமாயிருந்த இரணியனைக் களைந்தொழித்தவனன்றோ அவன்; அப்படிப்பட்டவன் நம்முடைய ப்ராப்திப்ரதிபந்தங்களைத் தொலைத்தருளானோ? தொலைத்தேயருள்வன்; நீ ஏன் வீணாகக் கவலைப்படுகிறாய் நெஞ்சே!; கவலையை விட்டொழிந்து தைரியமாய் இரு- என்றாராயிற்று. வழித்தங்கு வல்வினை = பிரதிபந்தகமொன்றுமில்லாவிடில் வழியில் எங்கும் தங்காமல் நேராகச் சென்று நற்கதி கண்ணலாம்; பிரதிபந்தகமான பாவங்கள் உள்ளவர்கள் இடைவழியிலே தங்க நேர்ந்துவிடும், ஆகவே இங்கு, வழியிலே தங்கப்பண்ணுகிற வல்வினையென்று ப்ராப்திப்ரதிபந்தகாமன பாவங்களைச் சொன்னபடி. மாற்றானோ என்றது- போக்கியே விடுவேன் என்றபடி. தழீஇக் கொண்டே- தழுவிக்கொண்டு இரணியனைக் கொன்ற கோரச்செயலை வருணித்துக் கூறுகின்றார் சழித்தெங்கும் என்று தொடங்கி. இரணியனைக் கொன்றபோது அவனுடம்பிலிருந்து கொழித்துக் கிளர்ந்த ரத்த வெள்ளமானது அங்கே ஸமீபத்திலிருந்த பள்ள நிலங்கள் யாவும் நிறையும்படி பெருகிற்று என்றவிதனால் அவனுடைய உடல் தடிப்பு சொல்லிற்றாயிற்று. “கோளரியினுருவங் கொண்டு அவுணனுடலம் குருதிகுழம்பியெழக் கூருகிரால் குடைவாய்” என்றார் பெரியாழ்வார்; திருமங்கையாழ்வாரம் பெரிய திருமொழியில் (11-4-4.) “வளையுகிராளி மொய்ம்பில் மறவோனதாகம் மதியாது சென்றொருசொல். பிளவெழவிட்ட குட்டமது வையமூடு பெருநீரில் மும்மைபெரிதே” என்றருளிச் செய்தார்; இரணியனைப் பிளந்தபோது உண்டான ரத்த வெள்ளக் குழியானது மஹா ப்ரளய ஸமுத்ரததிற்காட்டிலும் மூன்று மடங்கு பெரிது என்றாரிறே.

English Translation

O Heart! The Lord pressed the violent Asura Hiranya to his lap and fore apart his chest, making his blood and gore flow into pools of vortex everywhere. Will he not also rid us of the terrible karmas that stand between us and him ?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்