விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மனம்ஆளும் ஓர்ஐவர்*  வன்குறும்பர் தம்மைச்,* 
  சினம்மாள்வித்து ஓர்இடத்தே சேர்த்து,*  -புனம்மேய-
  தண்துழாயான் அடியைத்*  தாம்காணும் அஃதுஅன்றே,* 
  வண்துழாம் சீரார்க்கு மாண்பு? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மனம் ஆளும் - மனத்தையும் தங்கள் வசத்திலே அடக்கி ஆளுமவையான
ஓர் ஐயர் - ஒப்பற்ற பஞ்சேந்திரியங்கனென்கிற
வன் குறும்பர் தம்மை - பிரபலர்களான துஷ்டர்களை
சினம் மாள்வித்து - கோவமடங்கச் செய்து
ஓர் இடத்தே சேர்த்து - (பகவத் விஷயமாகிற) ஒரு நல்ல இடத்திலே கொண்டு மூட்டி,

விளக்க உரை

“மாவாய் பிளந்தார் மனம்- அந்தோ! வலிதேகொல்” என்று எம்பெருமானைக் கல்நெஞ்சனாகச் சங்கித்தார்; உடனே தம் ஸ்வரூபத்தை ஆராய்ந்து பார்த்தார்; சேஷியான எம்பெருமான் விஷயத்திலே சேஷபூதர். இப்படிச் சொல்லத் தகாதென்று விவேகமுற்று, எம் பெருமான் திருவுள்ளமானபடியே செய்யக்கடவுள்; அவனை நாம் நிர்ப்பந்திப்பதென்பது தகுதியன்று; நம்முடைய இந்திரியங்களையெல்லாம் அவன் பக்கலில் ஊன்றவைத்து அவனது திருவடித்தாமரைகளை ஸேவித்துக்கொண்டிருப்பதேயன்றோ நமக்கு ஸ்வரூபம்” என்று அருளிச் செய்கிறார் இப்பாட்டில். (மனமாளும் ஓரைவர்.) எம்பெருமானுக்கு ஆத்மா சேஷப்பட்டது; ஆத்மாவுக்கு மநஸ்ஸு சேஷப்பட்டது; மநஸ்ஸுக்கு இந்திரியங்கள் சேஷப்பட்டவை; அதாவது- மனம் போனவழியே செவி வாய் கண் முதலிய இந்திரியங்கள் போகக் கடவன- என்றிப்படி ஒரு நியதி உண்டு; இந்த நியமம் குலைந்து, இந்திரியங்களானவை மனத்தைத் தம் வழியிலே இழுக்கின்றனவாம். மனத்தையும் தங்கள் வசத்திலேயாக்கி ஆளுகின்ற வன்குறும்பர்களான ஐவருண்டு- பஞ்சேந்திரியங்கள்- செவிவாய் கண் மூக்கு உடல் என்பவை, அவற்றை வலியடக்கி பகவத் விஷயத்திலே ஊன்றவைக்க வேணுமென்கிறார் முன்னடிகளால். அசேதனங்களான இந்திரியங்களை ஐவர் என்று உயர்திணையாகக் கூறுதல் அவற்றின் கொடுமையைப்பற்றிய கோபத்தினாலென்க. “கோவாய் ஐவரென்மெய் குடியேறிக் கூறை சோறியை தாவென்று குமைத்துப் போகார், நான் அவரைப் பொறுக்ககிலேன் புனிதா! புட்கொடியாய் நெடுமாலே!” (பெரிய திருமொழி 7-8-9) என்ற திருமங்கையாழ்வார் பாசுரமுங் காண்க. வன்குறும்பர் என்ற விசேஷணத்தினாலும் இந்திரியங்களின் கொடுமை நன்கு விளக்கப்பட்டது. சினம் மாள்வித்து- ** காமாத் க்ரோதோபிஜாயதே” (ஒரு பொருளில் ஆசை உண்டாகி அது கைகூடாவிடில் பிறகு கோபம் உண்டாகிறது) என்று கீதையிலே சொல்லியிருக்கிறபடி அந்த இந்திரியங்களுக்கு உண்டான கோபத்தை மாளந்செய்து என்கை; இதன் கருத்து யாதெனில் இந்திரியங்கள் விஷயாந்தரங்களை அநுபவித்துப் புகுந்தால் அவ்விஷயங்கள் அற்பமாகையாலே தங்களுக்கு இதை போரவில்லையென்று கோபமுண்டாகும்; அந்த இந்திரியங்களுக்கு பகவத் விஷயாநுபவத்தை இரையாக்கிவிட்டால், அவ்விஷயம் கனத்ததாகையாலே தங்கள் பசி நன்றாகத் தீருமாதலால் கோபமுண்டாக ப்ரஸக்தியில்லை; இரை போரவில்லையே என்கிற கோபம் மாண்டுபோம்; ஆகவே “சினம் மாள்வித்து” என்பதை எச்சத் திரிபாகக்கொண்டு, ‘கோபத்தைத் தணிக்க’ என்றுரைத்தல் பொருந்தும். பஞ்சேந்திரியங்களுக்கு விஷயாந்தராநுபவத்தில் வயிறு நிறைய வில்லையேயென்கிற கோபம் தீரும்படி (பூர்ணத்ருப்தி உண்டாகும்படி) அவற்றை பகவத் விஷயத்திலே ப்ரவணமாக்கி- என்றதாயிற்று.

English Translation

Subduring the anger of the wicked five senses who rules the Heart, contemplating on the feet of the tulasi garland-wearing Lord with a steady mind, the life given to noble once is graceful.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்