விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பிரிந்துஒன்று நோக்காது*  தம்முடைய பின்னே,* 
  திரிந்துஉழலும் சிந்தனையார் தம்மை,*  -புரிந்துஒருகால்-
  'ஆவா!' என இரங்கார்*  அந்தோ! வலிதேகொல்,* 
  மாவாய் பிளந்தார் மனம்?  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒன்று நோக்காது - வேறொன்றிலும் கண் வையாமல்
தம்முடைய பின்னே - தம்மோடு கூடவே
திரிந்து உழலும் - அலைந்துகொண்டு திரிகிற
சிந்தனையார் தம்மை - என் நெஞ்சினாரை
ஒரு கால் - ஒரு நாலாகிலும்

விளக்க உரை

எம்பெருமானுடைய திருவுருவத்திற்குப் போலியான பொருள்களைக் கண்டபோதெல்லாம் தாம் பாவநாப்ரகர்ஷத்தாலே அவற்றினருகே போய் அநுபவிக்கப் பாரிக்கிறபடியைப் பேசினார் கீழ்ப்பாட்டில். அருகே சென்றவாறே அவை உபமான பதார்த்தங்களாகவே (அதாவது- மேகமாகவும் கடலாகவும் இருளாகவும் பூவைப் பூவாகவும்) இருக்குமேயன்றி உபமேயமான எம்பெருமானாக இருக்கமாட்டாவே; “ஐயோ! நாம் எம்பெருமானையே ஸாக்ஷாத்தாக ஸேவிக்கப்பெற்றோமென்று களித்திருந்தோமே; இப்படி அந்யதாஜ்ஞாநமாகவா முடிந்து விட்டது!” என்று வருத்தமுண்டாகி, ‘எம்பெருமான் நம்மை இப்படியே வருத்தப்படுத்தி வருகிறானே யொழிய ஒருகாலும் அவள் திருவுள்ளத்தில் இரக்கம் பிறப்பதில்லையே!; என்ன கல்நெஞ்சோ!’ என்று வெறுக்கிறார். ஆவாவென = ‘ஹா ஹா’ என்கிற வடமொழி அவ்யயம் ஆவாயென்று கிடக்கிறது. இரக்கக் குறிப்பிடைச்சொல். மாவாய் பிளந்தவரலாறு :- கம்ஸனாலேவப்பட்ட அஸுரர்களில் கேசியெனபவன் குதிரையினுருவத்தோடு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி கனைத்துத் துரத்திக்கெண்டு கண்ணபிரான்மேற் பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களை யுதிர்த்து உதட்டைப் பிளந்து அதனுடம்பையும் இருபிளவால் வகிர்ந்து தள்ளினள் என்பதாம். ஆச்ரிதர்கட்காகக் கேசிவதம் முதலிய அரிய பெரிய செயல்களைச் செய்து பாமகாருணிகள் என்று பேர் பெற்றிருப்பவன் என் விஷயத்திலே கல்நெஞ்சனாவதே! என்று வெறுக்கிறார்.

English Translation

Not once does the Lord take pity on his devotees, -who sacrifice everything and run after him heedless of any other thought, -and inquire, "Oh, Oh!", Alas, does the Lord who ripped the horse's jaws have such a hard heart?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்