விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நினைத்துஇறைஞ்சி மானிடவர்*  ஒன்றுஇரப்பர் என்றே 
  நினைத்திடவும் வேண்டாநீ நேரே,*  -நினைத்துஇறைஞ்ச-
  எவ்அளவர்*  எவ்இடத்தோர் மாலே,*  அதுதானும்- 
  எவ்அளவும் உண்டோ எமக்கு?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

மாலே - ஸர்வேச்வரனே!
மானிடவர் - “இவ்வுலகத்தவர்கள்
நினைத்து இறைஞ்சி - நம்மை ஒரு பொருளாக நினைத்து வணங்கி
ஒன்று - ஏதாவதொரு அற்ப பலனையாவது
இரப்பர் - நம்மிடத்தில் வேண்டிக் கொள்வர்கள்

விளக்க உரை

“மாலே!, மானிடவர் நினைத்து இறைஞ்சி ஒன்று இரப்பர் என்றெயும் நீ நினைத்திட வேண்டா” என்று முன்னடிகளை அந்வயித்துக்கொள்ள உலகிலுள்ள மனிதர்கள் ஐச்வர்யம் ஸந்தானம் முதலிய க்ஷுத்ர புருஷர்த்தங்களையாவது உன்னிடத்திலே வந்து விரும்பினால், அவர்கள் உன்னிடத்திலே உபாயத்வபுத்தியையாவது வஹித்திருக்கின்றனர் என்று ஒருவாறு மகிழ்ந்திருக்கலாம்; அக்கேடுமில்லை. “ஆரோக்கியம் வேண்டி ஆதித்தியனைப் பணிகின்றேன்; செல்வம் வேண்டிச் சிவனைத் தொழுகின்றேன்; ஆயுள் வேண்டி அயனை யடைகின்றேன்” என்றிப்படி ஒவ்வொரு பலனை வேண்டி ஒவ்வொரு தேவதாந்தரத்தைப்பணிய ஓடுமவர்களாயிருக்கின்றார்களே யொழிய, அந்த க்ஷுத்ர பலன்களை விரும்பியாகிலும் உன்னிடத்தில் வருகிறவர்களைக் காணோமே. ஆகவே மானிடவர் உன்னை உபாயமாகவும் பற்றாதிருக்க, உபேயமாகப் பற்றுகைக்கு என்ன ப்ரஸக்தியுளது? அடியோம் அப்படியல்ல; அவர்களுடைய துர்ப்புத்தி அடியோமுக்குச் சிறிதுமில்லை என்றாராயிற்று. நேரே நினைத்திறைஞ்ச என்றவிடத்து நேரே என்றது உள்ளபடியாக என்றபடி. உன்னை உபாயமாகவும் கொள்ளாத பாபிகள் உபாயோபேயங்களிரண்டுமாக உன்னை எப்படி கொள்வார்கள் என்று கைமுதிக நியாயத்தாற் காட்டுகிறபடி. எவ்வளவரெவ்விடத்தோர் என்றதில், “எவ்விடத்தோர்” என்று முன்னே அந்வயித்து எவ்வளவர்’ என்று பின்னே அந்வயிருக்கவேணுமென்று பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம்போலும். இது தன்னிலே ஸ்வாரஸ்யமுமுண்டு. “நேரே நினைத்திறைஞ்ச எவ்விடத்தோர்?” = இவ்விருள்தருமான ஞாலத்திலே பிறந்து வைத்து உன்னை உள்ளபடி நினைத்திறைஞ்ச எப்படி முடியும்? என்றார் முதலில். அதற்கு மேல், இவ்விருள் தருமாஞாலத்திலேயே பிறந்திருக்கிற தமக்கு மாத்திரம் இந்த அத்யவஸாயம் எங்ஙனே உண்டாயிற்று? என்று பிறர் சங்கிக்கக்கூடுமே யென்றெண்ணி அந்த சங்னீகக்குப் பரிஹாராமக. எவ்வளவர்? என்கிறார்; இவ்விருள் தருமாஞாலத்திலே பிறந்து வைத்தாலும் உன்னுடைய நிர்ஹே துககிருபைக்கு இலக்காகும்படியான அதிகாரமாவது இருந்தால் கடைந்தேறலாம்; அதுதானுமுண்டோ என்றவாறு.

English Translation

O Lord adorable! You need have no fear that men who contemplate you may come asking for favours. How many can contemplate and praise you directly? Where are they? Certainly, do I have the least bit of such a desire?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்