விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வினையார் தரமுயலும்*  வெம்மையை அஞ்சி,* 
  தினையாம் சிறிதளவும் செல்ல நினையாது*
  வாசகத்தால் ஏத்தினேன்*  வானோர் தொழுதுஇறைஞ்சும்,* 
  நாயகத்தான் பொன்அடிக்கள் நான்.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தர முயலும் - நமக்கு உண்டு பண்ண நினைக்கிற
வெம்மையை அஞ்சி - கொடிய துன்பங்களுக்கு அஞ்சி
தினை ஆம் சிறிது அளவும் - தினையளவு சிறிய அற்ப காலமும்
செல்ல நினையாது - வீணாகக் கழிய விரும்பமாட்டாமையினாலே,
நான் - அடியேன்

விளக்க உரை

நானும் மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்தவனேயாகிலும் இனிமேல் பிறவாதபடிக்கு ஒரு வழி தேடிக் கொண்டேனென்கிறார். எம்பெருமானோடு இடைவிடாது சேர்ந்திருக்கை புண்யபலமென்றும் அவளைப் பிரிந்து வருந்துகை பாபபலமென்றும் நூல்கள் கூறும். நாம் இனிமேலும் பாவமே செய்வோமாகில் இன்னமும் வெவ்விதான பகவத் விச்லேஷ துக்கமே நமக்கு நேர்ந்திடும் என்று அச்சமுண்டாயிற்று; அவனைப் பிரிந்து ஒருநொடிப்பொழுதும் தரித்திருக்க மாட்டாமையினாலே, வானோர் தொழுதிறைஞ்சும் பெருமை வாய்ந்த அப்பெருமானுடைய பொன்னடிகளை நான் வாய்கொண்டு துதித்துப் போருகின்றேன் என்றாராயிற்று. வினையார் = திணைவழுவமைதி; கோவத்தினால் உயர்த்திக்கூறுகிறபடி. வெம்மை = கடூரமான துக்கம். நினையாம் சிறிதளவும் = தானியங்களுள் தினயாம் சிறிதளவும் = தானியங்களுள் தினையென்பது மிகச்சிறதாதலால் அதனை உவமையாக எடுத்துக்கொண்டபடி; அத்யல்பகாலமும் என்றபடி. நாயகம்- பெருமை.

English Translation

Fearing the travails that karmas wait to heap, I have worshipped the Lord –whom celestials praise and worship, -with my poems, without swerving even on iota from my path of devotion.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்