விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பார்உண்டான் பார்உமிழ்ந்தான்*  பார்இடந்தான் பார்அளந்தான் 
  பார்இடம் முன்படைத்தான் என்பரால்,*  -பார்இடம்-
  ஆவானும்*  தான்ஆனால் ஆர்இடமே?,*  மற்றொருவர்க்கு- 
  ஆவான் புகாவால் அவை.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பார் இடம் படைத்தான் - இப்பூமியை யெல்லாம் உண்டாக்கினான்
என்பர் - என்ற சாஸ்த்ர ஞானிகள் சொல்லுகிறார்கள்;
பார் உமிழ்ந்தான் - (பிறகு) அதைப் புறப்படவிட்டான்;
பார் இடம் ஆவானும் தான் - அவனே ஸகல ப்ரபஞ்ச ஸ்வரீபியாகவுமிருக்கிறான்;
ஆனால் - ஆனபின்பு (நமக்கு)

விளக்க உரை

கீழ்ப்பாட்டில் இப்பார் என்ற இவ்வுலகத்தின் ப்ரஸ்தாவம் வரவே உலகிலுள்ள பிராணிகளின் தன்மைகளில் ஆழ்வார்க்கு ஆராய்ச்சி சென்றது. ஸ்ரீமந்நராயணனையே ஸர்ஸ்வாமியென்ற கொண்டு பற்றாமல் கண்ட தெய்வங்களின் காலிலே விழுந்து அலைந்து திரியும் ராஜஸதாமஸப் பிராணிகள் விஞ்சியிருக்கக் கண்டார். திருவுள்ளத்திலே பரிதாபம் தோன்றி, ஸ்ரீமந்நாராயணனுக்கு அடிமைப்பட்டிருக்கை தவிர வேறொன்றும் தகுதியல்ல என்பதைக் காரணத்துடன் வெளியிடுகிறார். பிரளயங் கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றிலே வைத்து நோக்கினவன் நாராயணன்; அவற்றை மறுபடியும் வெளிப்படுத்தினவனும் அவனே; பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு போன ஹிரண்யாக்ஷனை மஹாவராஹமாகிக்கொன்று அப்பூமியை மீட்டுக் கொணர்ந்தவனும் அவனே; மற்றொருகால் மஹாபலியின் அஹங்காரத்தை அடக்கி அவன் பக்கலில் நின்றும் இவ்வுலகை ஸ்வாதீநப்படுத்திக் கொண்டவனும் அவனே; இங்ஙனே பல் பல சொல்வதேன்? இப்புவனி முழுவதையும் உண்டாக்கினவன் அவனே; இவ்விஷயம் நான் உத்ப்ரேக்ஷித்துச் சொல்லுகிறதல்ல; வேதங்களும் வைதிகர்களும் சொல்லுவது இதுவே. ஆசுவிப்படி எம்பெருமான் இவ்வுலகத்திற்கு ஸர்வப்ரகாரங்களாலும் ரசக்ஷனாயிருப்பதுபற்றி சாஸ்திரங்களில் “எம்பெருமானே இவ்வுலகம், இவ்வுலகமே எம்பெருமான்” என்ற ஒற்றமைநயந் தோன்றச் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகையாலே இவ்வுலரகங்கட்கு அப்பெருமாளைத் தவிர்த்து வேறொருவரும் ஆச்ரயமாயிருக்க முடியாது; இவ்வுலகமும் அவனுக்கன்றி மற்றொருவர்க்கு சேஷப்பட்டிருக்க வழியில்லை என்றாயிற்று.

English Translation

They say, the lord who swallowed the Earth and remade it, lifted it and measured it, is also the lord who made the earth and space in the beginning, if the lord is himself the Earth and space as well, who else can be our refuge? It is impossible to seek another.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்