விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அமைக்கும் பொழுதுஉண்டே*  ஆராயில் நெஞ்சே,* 
  இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத்திறங்கள்*
  ஏசியே ஆயினும்*  ஈன்துழாய் மாயனையே,* 
  பேசியே போக்காய் பிழை.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆராயில் - ஆராய்ந்து பார்த்தால்
இமைக்கும் பொழுதும் - ஒரு க்ஷண காலமாகிலும்
அமைக்கும் பொழுது உண்டே - வீண்போது போக்க முடியுமோ?
இடைச்சி குமை திறங்கள் - யசோதையின் கையிலே அகப்பட்டு இவன் நலிவுபட்ட பாடுகளை
ஏசியே ஆயினும் - பரிஹா ஸோக்தியாகச் சொல்லியாவது

விளக்க உரை

அவனுடைய குணங்களை வாழ்த்துவதே ப்ராப்தம் என்று நெஞ்சுக்கு உபதேசித்தார் கீழ்ப்பாட்டில். அவனுடைய ஸௌலப்பத்தை வாழ்த்துவதென்றால் அபசாரத்தில் போய் முடியுமோ; ‘வெண்ணெய் திருடினான், இடைச்சிகையில் அகப்பட்டுக் கொண்டான். தாம்பினால் கட்டுண்டான், உரலோடு பிணிப்புண்டான். அடியுண்டு அழுது ஏங்கினான்” என்று இப்படிப்பட்ட கதைகளைச் சொல்லி வாழ்த்துவதுதானே ஸௌலப்யகுணத்தை வாழ்த்துகையாவது; இவை பேசினால் சிசுபாலாதிகளோடு ஒப்போமன்றோ; இது நமக்குத் தகுமோ? என்று நெஞ்சு இறாய்க்க அதனை ஸமாதாகப்படுத்துகிறார் இதில். பரத்வம் என்றும் ஸௌலப்யம் என்றும் இரண்டு தன்மைகள் எம்பெருமானுக்கு உள்ளன; நெஞ்சே! பரத்வத்தை அநுஸந்திக்க நீ யோக்யனல்லை; அவன் பரமபுருஷன் என்று தெரிந்தவாறே ‘நான் நீசன் நான் நீசன்’ என்று நெடுந்தூரம் ஒடப்பார்க்கிறாய்; ஆகையாலே பரத்வத்தைப் பற்றின பேச்சு உனக்கில்லை. இனி, ஸௌலப்யத்தைப் பேசு என்றால் அபசாரமாகுமே யென்கிறாய். ஆக இரண்டையும் விட்டு விட்டால் வேறு எதைச் சொல்லிப்போது போக்கலாமென்றிருக்கிறாய் நெஞ்சே! ஒரு நொடிப் பொழுதாகிலும் வீண் போகலாமோ? கீழே அநாதிகாலம் பாழே கழிந்தது போராதோ? அவனுடைய ஸௌலப்ய குணத்தைப் பேசினால் ஓரிடைச்சியாகிய யசோதையினிடத்தில் அவன்பட்ட பரிபவங்களையெல்லாம் பேச வேண்டியதாமமாகையால் அது அபசாரமாமென்கிறாய்; அப்சாரமாயினும் ஆயிடுக ஏதாகிலும் எம்பெருமான் விஷயமான பேச்சாயிருந்தால் போதுமானது; அவனை ஏசின சிசுபாலாதிகளும் முடிவில் நற்கதிபெற்று உயர்ந்தனர்காண்; (“ஏசினாருய்ந்துபோனார்” என்றார்(திருக்குறுந்தாண்டகம் 17.) திருமங்கையாழ்வாரும்) ஆகையாலே, ஏத்துதலோ ஏசுதலோ எதுவாயினும் ஆகுக. எம்பெருமான் விடியமென்பதொன்றே போரும்; பேசாய் என்கிறார். நெஞ்சே! ஆராயில் இமைக்கும்பொழுதும் அமைக்கும்பொழுது உண்டே? = ஏகஸ்மிந்நய்ப்யதிக்ராந்தே முஹூர்த்தே த்யாநவர்ஜிதே - தஸ்யுபிர் முஷிதேநேவ யுக்தமாக்ரந்திதும் ந்ருணாம்” (எம்பெருமானைப் பற்றின சிந்தையின்றியே ஒரு நொடிப் பொழுது கழிந்தாலும், கள்ளர் வந்து ஸர்வஸொத்தையும் கொள்ளை கொண்டால் எப்படி கதறுவோமோ அப்படிக் கதற வேண்டும்) என்று சொல்லுகிற பிரமாணத்தை ஆராய்ந்தால் ஒரு நிமிஷமாவது வெறுமனிருக்க வொண்ணுமோ என்றபடி. அமைத்தல் - அடங்கியிருத்தல், வாய் மூடியிருந்தல். இடைச்சி குமைத்திறங்களேசியேயாயினும் = இங்கே இடைச்சியென்று யசோதைப் பிராட்டியை மாத்திரம் சொல்லிற்றாகலாம்; அன்றியே ஜாத்யேகவசநமாய் மற்றும் பல இடைச்சிகளையும் சொல்லிற்றாகலாம். குமைத்திறங்களாவன - இடைச்சிகள் கையிலே அகப்பட்டுக் கொண்டு துன்பப்பட்ட விதங்கள். அவற்றைச் சொல்லி ஏசுகையாவது-( நாச்சியார் திருமொழி 12-8 ) “கற்றினம் மேய்க்கலும் பெற்றான் காடு வாழ்சாதியுமாகப்பெற்றான். பற்றியுரலிடை யாப்புமுண்டான்” 3. “வண்ணக் கருங்குழலாய்ச்சியால் மொத்துண்டு, கண்ணிக்குறுங்கயிற்றால் கட்டுண்டான்காணேடீ” (பெரிய திருமொழி 11-5-5) என்றாற்போலே வசை கூறுகை. போக்காய்பிழை = ஈன்துழாய் மாயனை ஏசிப்பேசியேயாகிலும் (காலத்தைப்) போக்காயாகில் (அது) பிழை = பிசகு என்றும், ஏசிப் பேசியேயாகிலும் பிழைகளைப்போக்கிக் கொள்ளுகிறாயில்லை என்றும், பிழைகளைப் போக்கிக்கொள் என்றும் உரைக்கலாம்.

English Translation

O Heart! Come to think, do we have sufficient time for praising him? Speak every moment about the sweet garland Lord, even if it be derisively about his hardships with the cowherd done.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்