விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  அவனாம் இவன்ஆம் உவன்ஆம்,*  மற்று உம்பர்- 
  அவனாம்*  அவன் என்று இராதே,*-அவனாம்-
  அவனே எனத்தெளிந்து,*  கண்ணனுக்கே தீர்ந்தால்,* 
  அவனே எவனேலும் ஆம்.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

அவன் ஆம் - துர்பலனாயிருப்பனோ?
இவன் ஆம் - ஸுலபனாயிருப்பனோ?
உவன் ஆம் - மத்யஸ்தனாயிருப்பனோ?
மற்று உம்பரவன் ஆம் - அல்லது, மிகவும் உயர்ந்தவனாய் எட்டாதேயிருப்பனோ?
என்று இராதோ - என்றிப்படி பலவகையான ஸந்தேஹங்கள் கொண்டிராமல்

விளக்க உரை

உரை:1

சில சமயங்களில் எம்பெருமான் ஸுலபன் என்று தோற்றும்; சில ஸமயங்களில் அவன் துர்லபன் என்று தோற்றும்; மற்றுஞ் சில ஸமயங்களில் ‘அவன் ஸுலபனுமல்வன், துர்லபனுமல்லன்; நடுத்தரமாயுள்ளவன்’ என்று தோற்றும். பின்னையும் சில ஸமயங்களில் ‘அப்பப்ப! அவன் மிக உயர்ந்தவன், மேலோர்க்கும் மேலானவன், அவனைப் பெறுதல் கூடுமோ’ என்று தோற்றம். ஆக இப்படியெல்லாம் பலபடியாகத் தோற்றும் தோற்றங்களைத் தொலைத்திட்டு அப்பெருமானுக்கு ஸௌலப்யமொன்றே அஸாதரணமான வடிவு என்று தெளிந்த ஞானத்தைப் பெற்று அக்கண்ணபிரானுக்கே ஆட்பட்டுவிட்டால் அவன் நமக்கு ஸகலவித பந்துவமாய் நின்று எல்லா நன்மைகளையும் செய்தருள்வான் என்கிறார். அவனாமிவனாமுவனாம் = அவன் என்றும் அது என்றும்- கைக்கு எட்டாத தூரத்திலுள்ள பொருள்களைச் சொல்லுவது வழக்கம். ஆகவே இங்கு அவனாம் என்றது - கைக்கு எட்டாமல் துர்பலனாயிருக்கும்படியைச் சொல்லுகிறது. இவன் என்றும் இது என்றும் கைக்கு எடடின பொருளைச் சொல்லுவது வழக்கமாகையாதே இங்கு இவனாம் என்றது ஸுலபனாம் என்றபடி. எம்பெருமானை துர்லபனாக நினையாமல் ஸுலபனாக நினைக்கவேணுமென்று சொல்லுகிற இப்பாட்டில் “அவனாமென்றிராதே; உவனாமென்றிராதே, உம்பரவனாமென்றிராதே” என்று சொல்லுதல் மாத்திரமேயன்றோ பொருந்தும். “இவனாமென்றிராதே” என்றும் சொல்லுதல் எப்படி பொருந்தும்? எம்பெருமான் ஸுலடன் என்று நினையாதே என்று சொல்லுதல் இப்பாட்டுக்குச் சோராதன்றோ? என்னில்; கேண்மின்; அவனாமிவனாமென்று தொடங்கிச் செல்லுவதெல்லாம் அவரவர்கள் ஸந்தேஹிக்கிறபடிகளைச் சொல்லுகிறது. அதாவது- அவன் துர்லபனோ. ஸுலபனோ, மத்தியஸ்தனோ, மிகவும் துர்லபனோ என்றிப்படி ஸந்தேஹப்படாதே என்று ஸந்தேஹநிவ்ருத்தியை முன்னடிகளிலே விதித்து,மேலே ‘அவன் ஸுலபனே’ என்கிற நிச்சயவுணர்ச்சி பெறுமாறுவிதிக்கிறது. அவனாம் அவனேயெனத் தெளிந்து என்றதை அவன் அவனேயாம் எனத் தெளிந்து’ என்று இயைத்துக் கொள்க. அவன் அவனேயாகையாவது என்ன வென்றால், எம்பெருமானுடைய ஸ்வரூபமே ஸௌலப்யம் என்று தெரிவித்தபடி. எம்பெருமான் நம்மால் உணரப்படும்போதே ஸௌலப்ய குணவிசிஷ்டனாகவே உணரப்படுவான். இதிஹாஸ புராணங்களைக்கொண்டு எம்பெருமானை நாம் தெரிந்து கொள்ளும்போது முந்துற முன்னம் ஸௌலப்யகுணமே தெரியவருவதனால் அவன் என்கிற சொல்லில் ஸௌலப்யகுணமே பொருளாகப் பொதிந்துகிடக்கிறதென்று ஆழ்வார் திருவுள்ளம் பற்றி அவன் அவனேயாம் என்று இங்கு அருளிச்செய்யும்மழனா அற்புதமானது.

உரை:2

கடவுள் யார் என்பதைப் பற்றி பல சந்தேகங்கள். அது அவனா இவனா இல்லை இரண்டு பேருக்கு இடையில் உள்ள உவனா, வானத்தில் இருப்பவனா என்றெல்லாம் கலங்க வேண்டாம், உறுதியாக அவன் இவன் உவன் வானவன் எவனும் கண்ணனேதான்.

English Translation

Seeing his multitudinous forms, the he there, the he here, the he betwixt, and the he in the sky, do not get confused. Know the Krishna alone pervades al, and worship him. He will appear in all the forms you desire.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்