விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  நின்றும் இருந்தும்*  கிடந்தும் திரிதந்தும்,* 
  ஒன்றுமோ ஆவாற்றான் என் நெஞ்சுஅகலான்,*-அன்றுஅம்கை-
  வன்புடையால் பொன்பெயரோன்*  வாய்தகர்த்து மார்வு இடந்தான்,* 
  அன்புடையன் அன்றே அவன்?  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கிடந்தும் - சயனித்திருந்தும்
திரிதந்தும் - எழுந்துஉயாலியும்
ஒன்றும் - கொஞ்சமும்
மார்பு இடந்தான் அவன் - (அவ்விரணியனுடைய) மார்பைக் கிழித்தெறிந்த பெருமான்.
அன்பு உடையான் அன்றே - (ஆச்ரிதர்திறத்தில்) மிக் அன்புடையவனன்றோ; (ஆனது பற்றியே)

விளக்க உரை

நின்ற தெந்தை யூரகத்து” (திருச்சந்தவிருத்தம் 64) என்றபடி திருவூரகத்தில் நிற்கிறாப்போலே என்னெஞ்சில் நிற்கிறான். நின்று நின்று திருவடிகள் ஓய்ந்து போனால் “இருந்த தெந்தை பாடகத்து” என்றபடி திருப்பாடகத்தில் வீற்றிருக்கிறாப்போலே என்னெஞ்சில் வீற்றிருக்கிறான். வீற்றிருக்குமிருப்பிலும் இளைப்பு உண்டானவாறே “அன்று வெஃகணைக் கிடந்தது” என்றபடி திருவெஃகாவிலே சயனித்தருளுகிறாப்போலே என்னெஞ்சில் சயனித்தருளுகிறான். அதிலும் சிரமம் தோன்றினால் எழுந்து உலாவுகின்றான்; இப்படியே சிற்றல் இருத்தல் கிடைத்தல் திரிதல் என்னும் தொழில்களை ஓயாமல் செய்துகொண்டு என்னெஞ்சை விட்டுப் போகிறானில்லை. ஆனால், பக்தர்சிறத்தில் எம்பெருமான் இவ்வளவு அன்பு கொண்டிருக்கிறானென்பது புதிதான ஒரு ஆச்சரிய விஷயமல்ல. பண்டே ப்ரஹ்லாதாழ்வான் பக்கலில் அன்பு பூண்டு அரியன செய்து காட்டிய பெருமானுக்கு இவை ஒரு வியப்போ? அன்பின் மிகுதியினால் இத்தனையும் செய்கிறான் என்றாயிற்று. முதலடியில் சொன்ன நிற்றலிருத்தல் திரிதல்கள் ஆழ்வாருடைய நெஞ்சிலே செய்யப்பட்டவையென்று கொள்ளாமல் கண்டியூரரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை முதலிய திவ்ய பிரதேசங்களிலே செய்திருப்பவற்றைச் சொல்வதாகக் கொண்டு உரைப்பதும் ஒக்கும். அந்தந்த திவ்யதேசங்களிலே நின்றது மிருந்ததும் கிடந்ததும் திரிந்தது மெல்லாம் ஸமயம்பார்த்து என்னெஞ்சைப் பெறுகைக்காகவே; என் நெஞ்சைப் பெற்றானான பின்பு அந்தந்தத் திருப்பதிகளையெல்லாம் மறந்தொழிந்து என்னெஞ்சையே பற்றிக் கிடக்கிறான்; இதைவிட்டு ஒரு நொடிப்பொழுதும் நீங்குவதில்லை; இவ்வளவும் செய்தும் ஒன்றுஞ் செய்யாதானாக நினைத்திராநின்றான் என்றபடி.

English Translation

The Lord in standing, sitting, reclining and striding postured never cares rest, never leaves my heart. Then in the yore, he came with beautiful hands and strong nails, stopped Hiranya's mouth and tore his chest. Is he not loving towards us?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்