விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பால்ஆழி நீகிடக்கும் பண்பை,*  யாம் கேட்டேயும்- 
  கால்ஆழும்*  நெஞ்சுஅழியும் கண்சுழலும்,*-நீல்ஆழிச்-
  சோதியாய்! ஆதியாய்!*  தொல்வினைஎம் பால்கடியும்,* 
  நீதியாய்! நின்சார்ந்து நின்று.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நீ பால் ஆழி கிடக்கும் பண்பை - நீ திருப்பாற் கடலில் சயனிக்கு மழகை
கேட்டேயும் - காதாற்கேட்ட மாத்திரத்திலும்
கால் ஆழும் - கால்கள் தடுமாறுகின்றன;
நெஞ்சு அழியும் - நெஞ்சு சிதிலமாகா நின்றது;
கண் சுழலும் - கண்கள் சுழலவிடா நின்றன.

விளக்க உரை

நைச்சியங்கொண்டாடி அகலப் பார்ப்பது தகாது, எப்படியாவது அவனை அணுகப் பார்ப்பதே நன்று என்று கீழ்ப்பாட்டில் அருளிச்செய்த ஆழ்வார் தாம் அணுகி அநுபவிக்க இழிந்தார்; திருப்பாற் கடலிலே திருமால் பள்ளி கொள்ளுந் திறத்தை அநுபவிக்கத் தொடங்கும்போதே தாம் விகாரப்படும்படியைப் பேசுகிறார் இதில். ஒரு வெள்ளைக் கடலிலே ஒரு கருங்கடல் சாய்ந்தாற்போல், நீலமணி வண்ணானான நீ திருப்பாற்கடலிலே கிடந்ததோ கிடக்கையை சாஸ்த்ரமறிந்த மஹான்கள் சொல்ல நான் காதாற்கேட்ட மாத்திரத்திலும் ‘இப்படியும் ஒரு அழகுண்டோ!’ என்று ஈடுபட்டு, கால் நடைதாராமல் ஆழ்ந்து போகவும், நெஞ்சு நீர்ப்பண்டமாகக் கரைந்து அழிந்து போகவும், கண்கள் ஒரு வஸ்துவையும் க்ரஹிக்க முடியாமற் சுழலமிடவும் பெற்றேன் என்கிறார். “நீலாழிச் சோதியாய்! பாலாழி நீ கிடக்கும் பண்பை” எனச் சேர்த்து அந்வயித்துப் பரபாக சோபா ரஸத்தைப் பாங்காக அநுபவிக்க. நீலம் என்பது நீல் எனச் சிதைந்தது என்றாவது, நீல + ஆழி, (நீலவாழி என்றாகாமல்) வடமொழித் தீர்க்க சந்திபெற்றுக் கிடக்கிறது என்றாவது கொள்க. நின் + சார்ந்து, நிற் சார்ந்து, நைச்சியம் பேசிப் பின்வாங்குகை தவிர்ந்து உன்னை அணுகினேன்; அணுகினவாறே உன் சரிகைகளைக் கேட்க ஆவல் கொண்டேன்; க்ஷீராப்திசயன வ்ருத்தாந்த விஷயமாகச் சிறிது கேட்டேன்; கேட்டவுடனே விகாரமடைந்தொழிந்தேன். காதால் கேட்டதற்கே இவ்வளவானால் கண்ணால் காணப்பெற்றால் என்படுவேனோ அறியேன் என்றாராயிற்று. “தொல்வினை எம்பாற்கடியும் நீதியாய!” என்பதற்கு- நைச்சியம் கொண்டாடிப் பிற்காலிக்கையாகிற பழைய பாவத்தைப் போக்கடிக்கு மியல்வினனே! என்பதாகவும் பொருள் கொள்ளலாம்.

English Translation

O Lord of deep-ocean hue! O First Lord! O means for the destruction of our age-old karmas! We have heard of your glories form reclining in the Milk Ocean, Because of my desire to attain you, my feet fatter, my heart faints, my eyes roll, alas!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்