விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  யாதானும் ஒன்றுஅறியில்*  தன்உகக்கில் என்கொலோ,* 
  யாதானும் நேர்ந்து அணுகாஆறுதான்?,*-யாதானும்-
  தேறுமா*  செய்யா அசுரர்களை,*  நேமியால்- 
  பாறுபாறு ஆக்கினான் பால். 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

நேமியாய் - திருவாழியினாலே
பாறு பாறு ஆக்சினான் பால் - துண்டம் துண்டமாகத் துணித்தொழித்த எம்பெருமான் பக்கலில்
யாதானும் நேர்ந்து - எதையாவது ஸமர்ப்பித்து
அணுகா ஆறுதான் என்கொல் - கிட்டாமலிருப்பது என்னோ?
யாதானும் ஒன்று அறியில் - எதையாவது ஒரு வஸ்துவை அறியக்கூடிய சைதந்யத்தையுடைத்தாயிருந்து வைத்தும்
தன் உகக்கில் - தான் ஆநந்தப்படுவதைத் தன்மையாக உடைத்தாயிருந்து வைத்தும்

விளக்க உரை

ஜ்ஞாநாநந்த மனஸ்த்வாத்மா” என்று ஞானமும் ஆந்தமும் ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதைப் பிடித்துக்கொண்டு அருளிச் செய்கிற பாசுரம் இது. இந்த நெஞ்சு அசேதநப் பொருளல்ல; சேதநப் பொருள்; அதாவது அறிவையும் ஆநந்தத்தையும் உடைய பொருள். இது அறிவில்லாத வஸ்துவாயிருந்தால் இதைப்பற்றிக் கவலையில்லை. எப்போது அறிவுடையதாயிற்றோ அப்போதே எம் பெருமானைப் பற்றினதாகவே ஆய்விட்டது. “ஒண்தாமரையாள் கேள்வனொருவனையே நோக்கு முணர்வு” (முதல் திருவந்தாதி 67) என்கையாலே ஞானமாகில் பகவத் விஷயத்தைப் பற்றித்தானேயிருக்கும். ஆகையாலே இந்த நெஞ்சு பகவத் விஷயத்தைக் கண்டு பின்வாங்குவது எப்படி சேரும்? அது கிடக்கட்டும் ஞானம்போலே ஆநந்தமும் ஒரு தன்மையாக இருக்கிறது இதற்கு. ஆநந்தமுண்டாகில் பகவத் விஷயத்தைப் பற்றாமல் எப்படி ஆநந்தம் ஸித்திக்கும்? ஸித்திக்கமாட்டாது. ஆகவே, ஞானம் ஆநந்தம் என்கிற இரண்டு தன்மைகள் இதற்கு உள்ளபோதே இது பகவத் விஷயத்தைப் பற்றினதாகவே ஆகா நிற்க. அந்தோ ‘அந்த பகவானை அணுகமாட்டேனென்று ஓடுகிறதே! இஃது என்ன பேதைமை! என்கிறார். “யாதானுமொன்றறியில் தன்னுகத்தில். யாதாணுந்தேறுமா செய்யாவசுரர்களை நேமியால் பாறு பாறாக்கினான்பால் யாதானும் நேர்ந்து அணுகாவாறுதான் என் கெடலோ” என்று அந்வயிப்பது. எம்பெருமான்றனக்கு விச்வாஸ முண்டாகும்படி ஒரு நல்ல காரியத்தையும் செய்யாத அசுரர்களைத் திருவாழியினாலே துண்டு துண்டாகத் துணித்துப் பொகட்ட அப்பெருமான் விஷயத்திலே இந்த நெஞ்சானது ஏதாவதொன்றைச் செய்து (ஆத்ம ஸமர்ப்பணமாவது செய்து) அணுகாமலிருப்பது என்னோ? என்று கரைகின்றார். நம்முடைய குற்றங் குறைகளைக் கண்டு நாம் பின் வாங்குவதேன்? எம் பெருமான் கையில் திருவாழி இல்லையோ? அசுரர்களை எல்லாம் துணித்தாற்போலே நம்முடைய விரோதியான பாபங்களையும் அவன்றானே அவ்வாழிகொண்டு துணித்திடானோ? ஏதுக்கு நைச்சியம் பேசிப் பின்வாங்க வேணும்? என்கை. நைச்சியங் கொண்டாடிப் பிற்காலிக்க நேரிடுங் காலத்து எம்பெருமானுடைய அபார சக்தியை அநுஸந்தித்துத் தேறுதலடைந்து அணுக முயலவேண்டும் என்று உணர்த்துவதுபோலும் இப்பாட்டு. ஆழ்வார் ஸ்வாநுபவரூபத்தாலே சாஸ்த்ரார்த்தங்களையன்றோ நமக்கு வெளியிடுகிறார்.

English Translation

The Lord with his discus minces the Asuras who make no effort to improve themselves. Even knowing him a little gives immense joy. Why then does no one approach him by any means?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்