விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  உணர ஒருவர்க்கு*  எளியேனே? செவ்வே,* 
  இணரும் துழாய்அலங்கல் எந்தை,*  -உணரத்-
  தனக்குஎளியர்*  எவ்அளவர் அவ்அளவன் ஆனால்,* 
  எனக்குஎளியன் எம்பெருமான் இங்கு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஆனால் - ஆகையினாலே
இங்கு - இவ்விடத்தில்
எம்பெருமான் - எம்பெருமான்
எனக்கு - என்னாவறிந்து
உணர எளியன் - கொள்ளக்கூடியவன்.

விளக்க உரை

“தோளிணை மேலும் நன்மார்பின்மேலுஞ் சுடர்முடிமேலும் நாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மான்” என்றபடி திருத்துழாய் மாலைகளைப் பரமபோக்யமாக அணிந்துகொண்டுள்ள எம்பெருமான் யாராலாவது உள்ளபடி அறிந்துகொள்ளக்கூடியவனோ? ஸ்வப்ரயத்நத்தால் ஒருவராலும் அறிந்துகொள்ளக் கூடியவனல்லன்; ஒருவனுடைய ஞானத்துக்கும் எம்பெருமான் விஷயமாகிறதில்லை என்று சொல்லிவிட்டால், ஆகாசத்தாமரை, முயற்கொம்பு, மலடிபிள்ளை முதலான வஸ்துக்கள்போல் ப்ரஹ்மமும் அடியொடு இல்லாத பொருள் என்று தேறிவிடுமே என்று நினைக்க வேண்டா; ஒருவருடைய ஞானத்துக்கும் எம்பெருமான் விஷயமாகிறதில்லையென்று யாரும் சொல்லவரவில்லை. எவரெவர்கள் எவ்வௌவெவ்வளவு அன்பு பாராட்டுவர்களோ அவரவர்களுக்கு அவ்வளவவ்வளவு எம்பெருமான் தன்னைக்காட்டிக்கொடுப்பவன் என்றே சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டிருப்பதால் நானும் என்னுடைய அன்புக்குத் தக்கவளவு எம்பெருமானை ஸபிக்க உரியேன் என்கிறார். முதலடியில் “ஒருவர்க்குச் செவ்வே உணர எளியனே” என்றது- அன்பு அற்ற ஒருவர்க்கும் ருஜுவாக அறியக்கூடாதவன் என்றபடி. புத்தி சாதுரியத்தாலே சாஸ்த்ரங்களையெல்லாம் ஸந்தேஹமறக் கற்றுணர்ந்தவர்களுக்கும் பக்தியில்லாதயளவில் ப்ரஹ்மஜ்ஞான முண்டாகாமட்டதென்ற பெரியோர்களால் சொல்லப்பட்டுள்ளது. *** யெது க்வதங்க்ரி ஸரஸருஹபக்தி ஹீநா தேஷாம் அமீபிரபி நைவ யதார்த்தபோத:- பித் தக்க மஞ்ஜந மநாபுஷி ஜாது நேத்ரே நைவப்ரபாபிரபி சங்கஸிதத்வபுத்தி:” (எம்பெருமானே! உனது திருவடித் தாமரைகளில் அன்பு இல்லாதவர்கள் எவரோ அவர்களுக்கு சாஸ்த்ரங்களாலும் உண்மையுணர்ச்சி உண்டாகமாட்டாது; பித்தம் கொண்டவனுடைய கண்ணில் பித்தஹரிமான அஞ்ஜனம் இடாவிடில் ஆயிரம் ஸூரியர்கள் காய்ந்தாலும் சங்கு மஞ்சள் நிறமாகக் காணப்படுமேயன்றி வெண்ணிறமாகக் காணப்படாதன்றோ, அதுபோல.) என்று ஸ்ரீவைகுண்டஸ்தவத்தில் கூரத்தாழ்வானருளிச் செய்தது இங்கு அநுஸந்திக்கத்தக்கது. இணருந்துழாயலங்கல் என்றவிடத்துப் பெரியவாச்சான் பிள்ளை அருளிச்செய்த அர்த்தவிசேஷம் குறிக்கொள்ளத்தக்கது; “(இணரும்) தன்னிலத்திற் காட்டிலும் இவன் தோளில் விகஸியாநிற்கும்; தேவர்கள் தோளில் மாலை வாடாது; ஸர்வாதிகனாகையாலே இவன் தோளிலிட்டது அரும்பியாநிற்கும்” என்று. தேவர்கள் மாலை அணிந்துகொண்டால் அந்த மாலைதோளில் வாடாமல் வதங்காமல் விளங்கிக் கொண்டிருக்கும் என்பது மாத்திரமேயுள்ளது; ஸர்வாதிகனான எம்பெருமானுடைய திருத்தோளிலோ வென்னில், மாலை வாடாதிருப்பதுமாத்திரமேயன்று; மேன்மேலும் அரும்புவிட்டு விகஸிப்பதும் செய்யும் என்று, இணரும் என்ற பதஸ்வாரதஸ்யத்தை நோக்கி இங்ஙனே அருளிச் செய்யப்பட்டதென்க. இணர்தலாவது கொத்துக்கொத்தாக அலர்தல்.

English Translation

The Lord my father wears a sprightly Tulasi garland, can anyone understand him fully? The more humble one is, the more one understands his glory, He comes to me with ease.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்