விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  ஆரானும் ஆதானும் செய்ய,*  அகலிடத்தை- 
  ஆராய்ந்து*  அது திருத்தல் ஆவதே?,*  -சீர்ஆர்-
  மனத்தலை*  வன் துன்பத்தை மாற்றினேன்,*  வானோர்- 
  இனத்தலைவன் கண்ணனால் யான்.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

யான் - நானோவென்றால்
சீர் ஆர் மனத்தலை - (எனது) சிந்த மனத்திலுள்ள
வன் துன்பத்தை - வலிய துன்பங்களை
வானோர் இனம் தலைவன் கண்ணனால் - நித்யஸூரிகளின் திரளுக்குத் தலைவனான கண்ணபிரானால்
மாற்றினேன் - நீக்கிக்கொண்டேன்.

விளக்க உரை

ஆரானும் ஆதானும் செய்ய = கற்றுணர்ந்தவர்களோடு கல்லாதவர்களோடு வாசியற எல்லாருமே இந்நிலத்தில் கலங்குவார்களாதவால் ஆரானும் என்கிறார். தேவதாந்தரபாஜநம் பண்ணுவார் சிலர், உபாயாந்தரங்களை அநுஷ்டிப்பார் சிலர். ப்ரயோஜநாந்தரங்களை நச்சுவார் சிலர் என்றிப்படி தப்புச் செய்கைகள் பல இருப்பதால் ஆதானும் என்கிறார். ஸம்ஸாரிகளையெல்லாம் திருத்துவதற்கென்றே திருவவதரித்த ஆழ்வார்தாமும் “அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே!” என்று திருவுள்ளம் வெறுத்துச் சொல்லும்படியாய்த்து ஸம்ஸாரிகளின் பொல்லாங்கு. வழி தப்பி நடக்கும் பிள்ளையின்பக்கல், பெற்ற தகப்பனும் சில ஸமயங்களில் மனம் வெறுத்து “அது எக்கேடு கெட்டாலும் கெடட்டும்” என்று சொல்லிக் கைவாங்கியிருப்பதுண்டிறே. மனத்தலை என்றவிடத்து, தலை- எழனுருபு; மனத்திலே என்றபடி. தம்முடைய நெஞ்சு திருந்தப்பெற்ற ஸந்தோஷத்தினால் “சீரார்மன” மென்கிறார். “வானொரினத்தலைவன்” என்று பரத்வமும் “கண்ணனால்” என்று ஸௌலப்யமும் சொல்லிற்று. நித்யஸூரிகளுக்கு நிர்வாஹனாயிருக்கையாகிற மேன்மையைப் பாராமல் இடக்கை வலக்கை யறியாத இடையர்களுக்குள்ளே ஒருவனாக வந்து பிறந்து காட்டியருளின ஸௌலப்யகுணத்திலே நான் ஈடுபட்டு என்னுடைய மனத்துன்பங்களையெல்லாம் போக்கிக்கொண்டேன்; துன்பங்களுக்கே நிலமான இவ்விபூதியில் நானோருவனாகிலும் இன்பம் பெற நேர்ந்ததேயென்று ஆநந்திக்கின்றேனென்றாராயிற்று.

English Translation

Let all do what they wish, is it possible to judge and correct the vast world? On my part, I have freed my good heart of untold miseries, through Krishna's grace.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்