விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  இளைப்பாய் இளையாப்பாய்*  நெஞ்சமே! சொன்னேன்,* 
  இளைக்க நமன்தமர்கள் பற்றி- இளைப்புஎய்த*
  நாய்தந்து மோதாமல்*  நல்குவான் நல்காப்பான்,* 
  தாய்தந்தை எவ்உயிர்க்கும் தான். 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தான் - அந்த எம்பெருமான்தான்
எவ்வுயிர்க்கும் - எல்லாப்பிராணிகளுக்கும்
தாய் தந்தை - தாயும் தமப்பனுமாவன்;
சொன்னேன் - (இவ்வுண்மையை உனக்குச்) சொல்லிவிட்டேன்;
இளைப்பாய் இளைப்பாய் - இனி நீ  அநர்த்தப்பட்டாலும் படு; சுகப்பட்டாலும் படு.

விளக்க உரை

*“காவலிற் புலனை வைத்துக் கலிதன்னைக் கடத்தப் பாய்ந்து நாவவிட்டுழி தருகின்றோம் நமன்றமர் தலைகள்மீதே” (திருமாலை 1) என்றபடி யமகிங்கரர்களை நாம் தகர்க்கும்படியும் அவர்களால் நமக்கு எள்ளளவு துன்பமும் நேரிடாதபடியும் எம்பெருமான் நம்மைக் காத்தருள்பவன். அப்படி அவன் நம்மைக் காத்தருளாவிடினும் அவனிடத்தில் நம்முடைய ப்ரதிபத்தி குலையக்கூடாது; *சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களம் மேலாத் தாய் தந்தையும் அவரேயினி யாவாரே” (திருவாய்மொழி 5-1-8) என்றபடி அவனையே நாம் ஸகலவித பந்துவுமாக விச்வஹித்திருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அவன் நம்மை ரக்ஷிக்கும்போதுதான் அவனிடத்தில் நாம் ப்ரதிபத்தி வைக்க வேண்டியது, உபேக்ஷித்த காலத்தில் நாமும் அவனை உபேக்ஷித்து விட வேண்டியது என்று ஒருகாலும் கருதவொண்ணாது. நெஞ்சமே! இவ்விஷயம் எல்லார்க்கும் எளிதில் தெரியமாட்டாது; ரஹஸ்யமான இவ்வர்த்தத்தை அன்பினால் உனக்குக் காதுபடச் சொன்னேன்; இந்த என் வார்த்தையை நீ உறுதியாகக் கடைப்பிடித்திருப்பாயாகில் உனக்கு ஒருபோதும் இளைப்பு நேரிடாது; இந்த வார்த்தையை நீ அலக்ஷியம் செய்து விச்வாஸம் குலைய நின்றாயாகில் உனக்கு மிக்க இளைப்பு நேரிடும். உண்மை இது; இனி நீ உன் கருத்தின்படி ஒழுகலாம் என்றாயிற்று.. யமபடர்கள் நம்மை வந்து பிடிக்கும்போதே நமக்கு மிக்க க்லேசம் உண்டாகும்படி பிடிப்பார்களாதலால் “நமன்றமர்கள் இளைக்கப்பற்றி” என்றார். அவர்கள் நம்மைப் பிடித்துக்கொண்டு போய், செந்நாய் கருநாய் வெறிநாய் முதலியவற்றை ஏவி நம்மை அளவற்ற க்லேசத்துக்கு ஆளாக்குவர்களாதலால் “இளைப்பெய்த நாய் தந்து மோதாமல்” என்றார். நல்குவான் நல்காப்பான் = நல்குதலாவது அருள்பரிதல்; அருள் செய்தாலும் செய்வன். அருள் செய்யாவிடினும் செய்யா தொழிவன் என்றபடி. அவன் எது செய்தாலும் ‘களைவாய் துன்பங் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” (திருவாய்மொழி, 5-8-8) என்றிருப்பதே நமக்கு ஸ்வரூபம் என்கிறார் ஈற்றடியால்.

English Translation

O Heart! What I say may make you swoon; Yama's agents will unleash their hounds on us and mangle us sorely, But do not lose strength; the oil-seeing lord who is mother and father to all souls will not see this happen.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்