விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காணப் புகில்அறிவு*  கைக்கொண்ட நல்நெஞ்சம்,* 
  நாணப் படும்அன்றே நாம்பேசில்?* -மாணி-
  உருஆகிக் கொண்டு*  உலகம் நீர்ஏற்ற சீரான்,* 
  திருஆகம் தீண்டிற்றுச் சென்று.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சென்று - தானே எங்கும் பரவி
திரு ஆகம - தனது திருமேனியினாலே
தீண்டிற்று - உலகங்களையெல்லாம் தீண்டினானென்பதை
காணப்புகில் - ஆராய்ந்தோமாகில்
நாம் பேசில் - நாம் பேசும் வார்த்தைகளுக்கு

விளக்க உரை

ஸ்வநதஸ்வீகாரமென்றும் பரகத ஸ்வீகாரமென்றும் சாஸ்த்ரங்களில் இரண்டு வகையான பற்றுதல்கள் சொல்லப்படும். எம்பெருமானை நாம்சென்று பற்றுகிற பற்று ஸ்வதஸ்வீகார மெனப்படும். அவன்தானே வந்து தம்மை ஸ்வீகரித்தருள்வது பரகதஸ்வீகாரமெனப்படும் இவ்விரண்டுள், எம்பெருமான்தானே நம்மை வந்து ஸ்வீகரிக்கையாகிய பரதக ஸ்வீகாரமே சிறந்த தென்பது ஸந்ஸம்ப்ரநாய ஸித்தாந்தம். “அவனை இவன் பற்றும் பற்று அஹங்கார கர்ப்பம்; அவத்யகாரம்; அவனுடைய ஸ்வீகாரமே ரக்ஷகம்” என்றார். பிள்ளையுலகாசிரியரும், கீழ்ப்பாட்டில் ‘அவனை நாம் காண நினைத்தோமாகில் காணலாம்’ என்றருளிச் செய்த ஆழ்வார்; ‘அப்பெருமானை நாமாகக் காண நினைப்பது தகுதியன்றே, அவன்தானே வந்து நம்மை ஸ்வீகரிக்கும்படி பார்த்திருக்கையன்றோ ஸ்வரூப ப்ராப்தம்’ என்று தெளிந்து அந்தத் தெளிவை இப்பாட்டால் வெளியிடுகிறார். அறிவு கைக்கொண்ட நன்னெஞ்சம் என்பது நெஞ்சை, நோக்கின அண்மை விளி; நெஞ்சே! நீ அறிவு இல்லாத அசேதந வஸ்துவன்றே; அறிவு கொண்டிருப்பவனன்றோ; உன் அறிவுக்கு என்ன ப்ரயோஜநம்? நான் ஒன்று சொன்னால் ‘இது தகும், தகாது’ என்பதை நீ ஆராய்ந்து பார்க்க வேண்டாவோ? “காத்தானைக் காண்டும் நீகாண்” (கீழ்ப்பாட்டு) என்று நான் சொல்லிவிட்டால் இதை நன்கு ஆராயாமல் காணமுயல்வதுதானோ உனக்குத் தகுதி? இப்படியாகில் உன் அறிவுக்குப் பயனில்லையே; உன்னையும் அசேதநரமாகவே எம்பெருமான் படைத்திருக்கலாமே என்கிறார்போலும். நாம் காணப்புகில் பேசில் நாணப்படுமென்றே = எம்பெருமானை நாம் காணப்புகுவதும் பேசப்புகுவதும் வெட்கப்படத்தக்க விஷயமன்றோ. ஏனென்றால், இதைப் பின்னடிகளில் விவரிக்கின்றார். எம்பெருமான் குறட்பிரமசாரியாகி மாவலிபக்கல் நீரேற்றுப் பெற்ற காலத்துத் தானே தனது திருமேனியைக் கொண்டு இவ்வுலகத்தையெல்லாம் தீண்டினான் என்பது உனக்குத் தெரிந்ததேயன்றோ. ஆகையாலே நம்மை வந்து தீண்டிக் கைக் கொள்வதற்கு அவன்தானே ஸித்தனாயிருக்க, அதற்கு மாறாக அவனை நாம் காணப்புகுவதும் பேசப்புகுவதும் தகாத காரியமன்றோ. ஒருவருடைய அபேக்ஷையுமில்லாமல் எல்லார் தலையிலும் திருவடியைக் கொண்டு வைத்தான் அவனாயிருக்க. நம்முடைய முயற்சி நாணத்தக்கதன்றோ என்கிறார்.

English Translation

Aho, this heart is sensitive! If blushes with shame at the very thought or mention of touching the Beautiful Manikin-Lord who took the Earth as a gift!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்