விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தாம்பால் ஆப்புண்டாலும்*  அத்தழும்பு தான்இளகப்,* 
  பாம்பால் ஆப்புண்டு பாடுஉற்றாலும்,*  -சோம்பாதுஇப்- 
  பல்உருவை எல்லாம்*  படர்வித்த வித்தா,*  உன்- 
  தொல்உருவை யார்அறிவார் சொல்லு?

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

பாம்பால் - காளியனாகிய பாம்பினால்
ஆப்புண்டு - கட்டப்பட்டு
பாடு உற்றாலும் - கஷ்டங்களையடைந்தாலும் (சிறிது திருவுள்ளம் வருந்தாமல்)
சோம்பாது - (ஜகத்ஸ்ருஷ்டியில்) சோம்பல்படாமல்
இ பல் உருவை எல்லாம் - இவ்வுலகில் காணப்படுகிற பலபல பிராணிகளையெல்லாம்.

விளக்க உரை

இப்பாட்டின் கருத்தைக் கூரத்தாழ்வான திருக்குமாரரான ஸ்ரீபராசரபட்டர் ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில் உத்தரசதகத்தில்- *** = ஸார்வ! த்வத்கம் ஸகலசரிதம் ரங்கதாமந்! துராசாபாசேப்யஸ் ஸ்யாந்ந யதிஜகதாம் ஜாது மூர்க்கோத்தராணாம். நிஸ்தந்த்ராளோஸ் தவநியமதோ நர்த்துலிங்க ப்ரவாஹா ஸர்கஸ்தேமப்ர ப்ருதிஷா ஸதாஜாகரா ஜாகடீதி.” என்ற ச்லோகத்தால் அநுஸந்தித்தமை அறியத்தக்கது. தாம்பாலாப்புண்டாலும் = நம்மாலே படைக்கப்படுகிறவர்கள் நம்மையே கயிற்றால் கட்டி நலிகின்றார்களே!; இப்படிப்பட்ட பாவிகளை நாம் ஏன் ஸ்ருஷ்டிக்கவேணும்; இறகொடிந்த பறவைபோலே கரணகளேபரங்களற்று ப்ரளய ஸீமாவில் மங்கிக் கிடக்கிற சேதநவர்க்கங்கள் அப்படியே மங்கிக் கிடக்கட்டும்; அவற்றுக்குக் கையுங் காலும் உண்டாம்படி நாம் ஸ்ருஷ்டிக்கவேயன்றோ அந்தக் கையையும் காலையுங் கொண்டு அவை நம்மையே புடைக்கின்றன; அவற்றை அப்படியே மங்கிப் போகும்படி போட்டு வைத்தால் நம்மைக் கட்டியடிப்பார் ஆருமில்லையே என்று கருதி எம்பெருமான் வெறுமனிருந்து விடலாம்; ஆயினும் இந்த சேதநர்கள் பக்கல் உள்ள நப்பாசையானது அப்படி இருக்க வொட்டுகிறதில்லைஎன்று உணர்க. அத்தழும்புதாளினகப் பாம்பலாப்புண்டு பாடுற்றலும் = காளியன் தனது வாலினால் கண்ணபிரானை அழுந்தக் கட்டி, திருமேனி தழும்பேறும்படி வருத்தத்தை உண்டுபண்ணினன்; இந்தத் தழும்பின் முன்னே எசோதையின் தாம்பாலாப்புண்ட தழும்பு அற்பமென்னவேண்டும்படி பாம்பாலாப்புண்ட தழும்பே வலிதாயிருந்ததென்பது விளங்க “அத்தழும்புதானிளக” என்றார். பாடு- வருத்தம் வித்தா = உலகங்கட்கெல்லாம் வித்தாக இருப்பவனே! என்றபடி. இப்படிப்பட்ட உன்னுடைய ஸ்வரூபத்தை அறியவல்லார் ஆர்? என்றது- ஸம்ஸாரிகள் உன்னைப் பரிபவித்தாலும் அவர்கள் மேல் ஆசாபாசம் விட்டு நீங்காமல் நன்மையையே நாடி யிருக்கையாகிற உன்னுடைய ஸ்வரூபம் ஒருவர்க்கும் நிலைகாண வொண்ணாதது என்றபடி.

English Translation

O Undiminishing seed that unfolds into all these variegated forms! You were bound by a leash of rope that let a mark, then you fought with a snake that left a mark, then you fought with a snake that left another mark erasing the previous one, And yet who realises your original form? Tell me.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்