விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  சூழ்ந்து அடியார் வேண்டினக்கால்*  தோன்றாது விட்டாலும்* 
  வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,*  -சூழ்ந்துஎங்கும்-
  வாள்வரைகள் போல்அரக்கன்*  வன்தலைகள் தாம்இடிய,* 
  தாள்வரை வில்ஏந்தினார் தாம்.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

சூழ்ந்து - (இந்த லீலா விபூதியிலே வந்து) வளைத்துக் கொண்டு
அடியார் வேண்டின் அக்கால் - ‘ஓ ஜனங்களே! நீங்கள் எனக்கு அடிமைப்பட வேணும்’ என விரும்பினால்
தோன்றாது விட்டாலும் - ஒரு அடியவனும் அகப்படாதபடி உபேக்ஷிக்கப் பெற்றாலும்
வாழ்ந்திடுவர் - திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்) உகந்தேயிருப்பர்;
பின்னும் - எக்காலத்திலும்

விளக்க உரை

ஆச்ரிதர்களிடத்தில் *எம்பெருமானுக்குள்ள வாத்ஸல்யத்தைப் பேசுகிறார். “எங்கும் சூழ்ந்து அரக்கண் வாள்வரைகள் போல் வன்தலைகள் தாம் இடியத் தாள் வரை வில்லேந்தினார் தாம் சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் (அடியார்) தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர்; பின்னும் வாய் திறவார்” என்று அந்வயம். இராவணனது தலைகளை அறுத்துத் தள்ள வலிய வில்லைக் கையிலேந்தி நின்ற இராமபிரானாகிய திருமால் இந்த லீலா விபூதியில் வந்து சேர்ந்து இங்குள்ள ஸம்ஸாரிகளைச் சூழ்ந்து கொண்டு ‘எனக்கு நீங்கள் அடியாராக வேண்டும்’ என்று அபேக்ஷித்தவளவில், “த்வம் மே” என்றால் “அஹம் மே” என்கிற ஸம்ஸாரிகள் வணங்காமுடித்தனத்தினால் அநாதரவுகாட்டி அடியவர்களாக ஆகாவிட்டாலும், அதனால் திருவுள்ளத்தில் சிறிதும் வருத்தங் கொள்ளாமல் “நாம் அபேக்ஷித்தபடியே இந்த ஸம்ஸாரிகளெல்லாரும் அடியவர்களாக ஆய்விட்ட பக்ஷத்தில் இந்த லீலாவிபூதி ஆளற்று அழிந்துபோய் விடுமன்றோ; இஃது அழியாதபடி நோக்குவதற்கு இவர்கள் அமைந்தார்கள் என்று தேறி மகிழ்ந்தே செல்வர்; ஏகாந்தமான ஸங்கதிகளை யெல்லாம் கூசாமல் சொல்லுகைக்குரிய பிரட்டிமாரிடத்திலும் இவ்விஷயத்தைச் சொல்லிக்கொள்ள வாய்திறக்கமாட்டார்; ‘ஸம்ஸாரிகள் என்னை அலக்ஷியம் பண்ணிக் கைவிட்டார்கள்” என்று ஒருபோதும் சொல்லமாட்டார் என்றதாயிற்று. ஸ்ரீவசநபூஷத்தில் (மூன்றாம் ப்ரகரணத்தில்- “பிராட்டி, ராக்ஷஸிகள் குற்றம் பெருமாளுக்கும் திருவடிக்கும் அறிவியாதாப்போல, தனக்குப் பிறர் செய்த குற்றங்களை பகவத் பாகவத விஷயங்களில் அறிவிக்கக் கடவனல்லன்” என்றருளிச் செய்தபின் “அறிவிக்கவுரியவனகப்பட வாய்திறவாதே ஸர்வஜ்ஞவிஷயங்களுக்கும் மறைக்குமென்னோநின்றதிறே” என்று அருளிச் செய்தது இந்தப் பாசுரத்தைக் கொண்டேயாம். அவ்விடத்தில் ஸ்ரீமணவாள மாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு:- “எதிர்சூழல்புக்கு’ என்கிறபடியே தன்னுடைய சீல ஸௌலப்யாதிகளைக் காட்டி ஸம்ஸாரி சேதநர்களைத் தப்பாமல் அகப்படுத்திக்கொள்வதாக வந்தவதரித்துத் தமக்கு அடியார் வேணுமென்றபேக்ஷித்தால் அவர்கள் அப்படி அநுகூலமாய்த் தோன்றாதொழிந்தாலும் ‘இவர்கள் செய்தபடி செய்கிறார்கள்; நாம் இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோமிறே’ என்று அதுதானே போக்யமாக விருப்பர்; அதுக்குமேல், அவர்கள் வைமுக்கியம் பண்ணினார்களென்று அவர்கள் குற்றத்தைத் தனியிருப்பிலே பிராட்டிக்கு மருளிச் செய்யாரென்கிற சூழ்ந்தடியார் என்கிற பாட்டிலே, சேதநர் செய்த குற்றங்களைத் தன் திருவுள்ளத்துக்கு உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு ப்ராப்தனான ஸர்வேச்வரனுமுட்படத் தன் திருப்பவளம் திறந்து அருளிச்செய்யாதே, தானருளிச் செய்யா தொழிந்தாலுமறியவல்ல ஸர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்குமென்று சொல்லா நின்றதிறே.” என்று.

English Translation

Whenever devotees gather and petition to the Lord, he gives them succour, even though he does not appear before them; and after that too, he doesn't speak to them. He wielded a bow and stood like a mountain, rolling the heads of the Rakshasa, like boulders all around.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்