விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  பார்த்துஓர் எதிரிதா நெஞ்சே,*  படுதுயரம்- 
  பேர்த்துஓதப்*  பீடுஅழிவுஆம் பேச்சுஇல்லை,*  -ஆர்த்துஓதம்-
  தம்மேனித்*  தாள்தடவ தாம்கிடந்து,*  தம்முடைய- 
  செம்மேனிக் கண்வளர்வார் சீர்.   

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஓதம் - கடலானது
ஆர்த்து - கோஷித்துக்கொண்டு
தம்மேனி தாள் - தம்முடைய திருமேனியையும் திருவடியையும்
தடவ - (அலையாகிற கையினாலே) தடவும்படியாக
தாம் கிடந்து - (அக்கடலில்) பள்ளி கொண்டருளி

விளக்க உரை

ஓதம் ஆர்த்து தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீரை நெஞ்சே! எதிரிதாப்பார்த்து ஓர்; படுதுயரம் பேர்த்து ஒதப்பீடு அழிவாம் பேச்சு இல்லை என்றும் அந்வயம். கடலானது ஆரவாரஞ் செய்துகொண்டு (தனது அலைகளாகிற கைகளாலே) திருவடிகளைத் தடவப்பெற்று இனிதாகத் திருக்கண் வளர்ந்தருளாநின்ற பெருமானுடைய திருக்கல்யானகுணங்களை நெஞ்சே! நம் கண்முன்னே நிற்பவனாகக்கொண்டு அநுஸந்தானம் செய்; கங்கையில் நாய் நீராடினால் நாயின் பாவங்கள் தொலையுமேயன்றி, கங்கைக்கு உள்ள பெருமை குறைந்து விடாது; அதுபோல, எம்பெருமானுடைய குணங்களை நாம் பேச, நமது பாவங்கள் தொலையுமேயன்றி, அவனுடைய பெருமைக்குக் குறைவு நேரிடுமென்கிற பேச்சுக்கே இடமில்லைகாண்; திருப்பாற்கடலிலே சயனித்துக்கொண்டு 1. “உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை” (திருவாய்மொழி 5-4. 11) என்கிறபடியே நம்முயை ரக்ஷணத்தையே சிந்தித்துக் கொண்டிருக்கின்ற பெருமானுடைய குணங்களை நாம் பேசி நமது பாவங்களைப் பாற்றிக்கொள்ள வேண்டாவோ? அவனுடைய குணங்கள் நம்மால் மறக்க முடியுமோ? கண்ணெதிரே நிற்பனபோல் தோன்றுகின்றனவன்றோ என்றாராயிற்று. எதிரிதா = எதிரில் உள்ளது எதிரிது. ஆ - ஆக என்பதன் குறை; எதிரிதாக என்றபடி. படுதுயரம் பேர்த்து ஓத = ஸம்ஸாரத்திலே நாம் படுகிற துக்கங்களையெல்லாம் உதறிவிட்டு ஆநந்தமாக அக்குணங்களையே பேசுகிறபக்ஷத்தில் என்றும் பொருள் கொள்ளலாம்; ‘நமது துக்கங்கள் தீருவதற்காக’ என்று பொருள் கொள்ளில், போர்த்து என்பதை எச்சத்திரிபாகக் கொள்ள வேண்டும்; போ என்றபடி.

English Translation

O Heart! When the ocean rolls, the Lord lies on it and lets the waves touch his feet and caress his frame, and even gives a look of love with his red dreamy eyes. Remove yourself from the path of self-destruction and praise the Lord. There is no loss of identity, it is the obvious truth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்