விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வழக்கொடு மாறுகோள் அன்று* அடியார் வேண்ட,* 
  இழக்கவும் காண்டும் இறைவ!-இழப்புஉண்டே,*
  எம்ஆட் கொண்டுஆகிலும்*  யான்வேண்ட, என்கண்கள்* 
  தம்மால் காட்டுஉன் மேனிச் சாய்? 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

யான் வேண்ட - என்னுடைய வேண்டுகோளுக்காக
எம் ஆள் கொண்டு ஆகிலும் - என்னை அடிமைப்படுத்திக் கொண்டாவது
என் கண்கள் தம்மால் - எனது கண்களுக்கு
உன்மேனி சாய் - உனது திருமேனியின் ஒளியை
காட்டு - காட்டியருள வேணும்

விளக்க உரை

எம்பெருமான், “ஆழ்வீர்! உலகத்தில் தலைவராயுள்ளவர்கள் அடியார் விஷயத்தில் உயிர் முதலியவற்றை இழந்தாகிலும் காரியம் செய்கிறார்களென்று எடுத்துக்காட்டின் உம்முடைய கருத்து எனக்குத் தெரியாமையில்லை; நீர் மறைப்பதில் என்ன பயன்? உம்முடைய எண்ணப்படி நான் எதைவேணுமானாலும் இழந்து காரியம் செய்யத் தடையில்லை; “அடியார் வேண்ட இழக்கவுங்காண்டும்” என்று நீர் சொல்லியிருக்கிறீர்; நீர் மெய்யே அடியாராகிலன்றோ நான் காரியம் செய்வேன்; நீர் அடியவர்தானோ?’ என்று கேட்டான். அதற்கு ஆழ்வார் எம்ஆட்கொண்டாகிலும் என்கிறார். நான் அடியவனோ அல்லேனோவென்று உனக்கு ஸந்தேஹமிருக்குமானால் நீயே என்னை அடியவனாக்கிக் கொண்டாவது காரியம் செய்ய வேணும் என்கை. எதைக்கொண்டு உம்மை நான் அடியவராக்கிக் கொள்வதென்று எம்பெருமான் கேட்க; அதற்கு ஆழ்வார் யான் வேண்ட என்கிறார். ***- = ரக்ஷ்யாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே” என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது; ரக்ஷ்யனுடைய அபேடிக்ஷயை மாத்திரமன்றோ ரக்ஷகனான நீ எதிர்பார்த்திருப்பது; நான் இப்போது அபேக்ஷிக்கிறேனன்றோ; இவ்வளவையேகொண்டு காரியம் செய்யலாமே என் வாயால் உன்னை இறைவ! என்று சொன்னேனே; என்னுடைய அடிமைக்கு இசைந்ததுதானே உன்னை இறைவனென்றேன்- என்றார். அது கேட்ட எம்பெருமான் ‘இந்த விபூதியில் இவ்வளவு வார்த்தை சொல்லுவார் ஆர்?’ என்று ஆச்சரியப்பட்டுத் திருவுள்ளமுவந்து ‘ஆழ்வீர்! உமக்கு என்னால் ஆக வேண்டிய காரியம் என்ன? சொல்லும்’ என்ன; என் கண்கள்தம்மால் காட்டு உன்மேனிச்சாய் என்கிறார். உனது திருமேனியின் சாயலை என்கண்களுக்குக் காட்டவேணுமென்னுமிவ்வளவே நான் வேண்டுவது என்றாராயிற்று. கண்கள்தம்மால்- உருபு மயக்கம்; கண்கள் தமக்கு என்க. அன்றி, மூன்றாம் வேற்றுமைப்பொருளைக் கொண்டு, உன் மேனிச்சாயை என் கண்களால் நான் காணும்படி செய் என்றுரைக்கவுமாம். சாய் = ** (சாயா) என்ற வடசொல் சாயை எனத் திரிந்து சாய் எனச் சிதைந்தது.

English Translation

O Lord! this is no breach of conduct, you could make on exception for your devotees, it is no great loss. I Pray you, at least because we are your devotees, let our eyes see the radiance of your dark frame.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்